Thursday, March 28, 2024
Homeசிறுவர் செய்திகள்6 வயதில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் சிறுமி... இப்போது அவர் வாங்கியிருக்கும் சொத்தின் மதிப்பு தெரியுமா?

6 வயதில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் சிறுமி… இப்போது அவர் வாங்கியிருக்கும் சொத்தின் மதிப்பு தெரியுமா?

- Advertisement -

இணையத்தில் பல மில்லியன் பலோவர்களைக் கொண்ட தென்கொரிய சிறுமி 55 கோடி மதிப்பு கொண்ட சொத்துக்கள் வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

சமூகவலைத்தளங்களில் குறிப்பாக யூ டியூப் சேனல் தான் இப்போது இருக்கும் இளைஞர்களுக்கு பணம் சம்பாதித்து கொடுத்துக் கொண்டிருக்கிறது என்றே கூறலாம்.

திறமை இருக்க வேண்டும், அதனுடன் அந்த வீடியோ மக்களை ரசிக்கும் படியும் இருக்க வேண்டும், அப்படி இருக்கும் வீடியோ மக்களுக்கு பிடித்துவிட்டால், நீங்களும் யூ டியூப்பில் ஹீரோவாக வரலாம்.

- Advertisement -

இது போன்று தான் தென்கொரியாவைச் சேர்ந்த Boram என்ற 6 வயது சிறுமி ஆரம்பத்தில் சாதரணமாக Boram யூ டியூப் என்ற சேனலை ஆரம்பித்தார்.

- Advertisement -

அதில், சிறுமி குழந்தைகள் வாங்கவிருக்கும் பொம்மைகள், கார்கள் போன்றவை எப்படி இருக்கும் என்பதை அதை வாங்கியே அதற்கு விமர்சனம் கொடுத்து வந்தார்.

அது எப்படி இருக்கும் என்பதை வீடியோவாக சிறுமி செய்து வெளியிட்டு வந்ததால், இது உலகில் இருக்கும் பல பெற்றோர்களுக்கு பிடித்து போக, இந்த சேனலை அதிகம் சப்ஸ்கிரைப் செய்ய ஆரம்பித்தனர்.

ஒரு விலையுயர்ந்த அல்லது சாதரணமான பொம்மை வாங்க வேண்டுமென்றால், பூராமின் ரிவ்யூவிவை பார்த்துவிட்டு சென்று வாங்குபவர்களும் இருக்கிறார்கள்.

இப்படி படிப்படியாக மக்களை கவர்ந்த போரோமின் யூ டியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைபர் மட்டும் 13.6 மில்லியன் இருக்கின்றனர். அதுமட்டுமின்றி தனியாக வீடியோ பிளாக் என்ற தளம் வைத்திருக்கிறார், அதில் சப்ஸ்கிரைபர் மட்டும் 17.6 மில்லியன், இப்படி இந்த இரண்டையும் சேர்த்தால் 30 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை போரம் வைத்திருக்கிறார்.

south-korea-girl-earning-kidhours
south-korea-girl-earning-kidhours

யூ டியூப் மூலம் மட்டுமே இவர் மாதத்திற்கு சுமார் 3.1 பில்லியன், அதாவது 21 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கிறாராம்.

இந்நிலையில் தான் இப்போது இவர் தென்கொரியாவின் Seoul பகுதியில் 8 மில்லியன் டொலர் அதாவது 55 கோடி ரூபாய்க்கு ஐந்து மாடி அடுக்கு கட்டிடத்தை வாங்கியுள்ளார்.

இது Boram Family company பெயரில் வாங்கப்பட்டுள்ளதாக ரியல் எஸ்டேட் பதிவு ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் ஊள்ளூ ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.