Wednesday, October 9, 2024
Homeசிந்தனைகள்பொதுவான சிந்தனைகள்#அவமானங்களை இவ்வளவு அழகாய் எதிர்கொள்ள முடியுமா? ஆபிரகாம் லிங்கனின் குட்டிக் கதை

#அவமானங்களை இவ்வளவு அழகாய் எதிர்கொள்ள முடியுமா? ஆபிரகாம் லிங்கனின் குட்டிக் கதை

- Advertisement -
ஆப்ரஹாம் லிங்கன்
ஆப்ரஹாம் லிங்கன்

அமெரிக்க பாராளுமன்றத்தில், அதிபர் ஆப்ரஹாம் லிங்கன் உரைநிகழ்த்தும்போது, அவரை மட்டம்தட்டும் நோக்கில் எதிர் தரப்பு பிரமுகர் ஒருவர் எழுந்து,

- Advertisement -

ஆப்ரஹாம் … …உங்கள் தந்தை தைத்துக்கொடுத்த செருப்பு இன்னும் என் காலை அலங்கரித்துக்கொண்டு இருக்கிறது என்றாராம் ….அதற்கு ஆப்ரஹாம் லிங்கன் சொன்னாராம்,

” நண்பரே என் தந்தை இறந்து பலவருடங்கள் ஆகிவிட்டது, இருப்பினும் அவர் தைத்து கொடுத்த செருப்பு உங்களின் காலை இன்னும் அலங்கரித்துக்கொண்டு இருக்கிறதென்றால், அது அந்த அளவுக்கு நேர்த்தியாக தைக்கப்பட்டுள்ளது

- Advertisement -

இருப்பினும் அவர் தைத்த இடத்தில் ஏதேனும் பழுது எர்ப்பட்டிருந்தால் அதை என்னிடம் கொடுங்கள் நான் அதை உங்களுக்கு சரி செய்து தருகிறேன்

- Advertisement -

எனக்கு செருப்பு தைக்கவும் தெரியும் ….. நாட்டை ஆளவும் தெரியும் என்று பதிலுரைத்தாராம் … … !!!

தன்னம்பிக்கை விடாமுயற்சி இவைகளில் இருந்து பெற்ற ஏழ்மையின் அனுபவ அறிவுக்கு நிகராக வேறெதுவும் போட்டியிட முடியாது பதவியில் இருக்கும் போதும் அவமான படுத்திய நபர் மீது கோபம் கொள்ளாமல், தன் அதிகாரத்தையும் காட்டாமல் புத்திசாலி தனமாக பணிவோடு பதில் அளித்தே அவமான படுத்தியவரின் மூக்கை உடைத்திருக்கிறார் லிங்கன்.

இந்த பக்குவமான மனதாலும் விடாமுயற்சியாலும் தான் பல தோல்விகளுக்குப் பின்னர் அமெரிக்காவின் ஜனாதிபதியாகி அடிமைத்தனத்திற்கு எதிராக குரல் கொடுத்தார்.

இதைத் தான் கண்ணதாசனும் ” நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்” என்றார். இன்றும் பல உயிர்கள் வணங்குகின்றன லிங்கனை.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.