Sunday, September 24, 2023
Homeசமயம்கிறிஸ்தவம்புனித வெள்ளி என்றால் என்ன? Good Friday in Tamil # World Good Friday...

புனித வெள்ளி என்றால் என்ன? Good Friday in Tamil # World Good Friday History

- Advertisement -

Good Friday in Tamil  புனித வெள்ளி

- Advertisement -

புனித வெள்ளி என்பது உலகில் உள்ள அனைத்து கிறிஸ்தவர்களாலும் கொண்டாடப்படக் கூடிய ஒரு முக்கியமான நாளாகும். இந்த நாளை பெரிய வெள்ளி என்றும் அழைக்கின்றனர். இந்த புனித வெள்ளி கிறிஸ்து பட்ட பாடுகளையும், அவரின் சிலுவையில் அவர் மரித்தததையும் நினைவுகூறும் விதமாக கொண்டாடப்படுகிறது.

இந்த புனித வெள்ளி, கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளான ஈஸ்டர் பண்டிகைக்கு முந்திய வெள்ளிக் கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. இந்த புனித வெள்ளியன்று கிறிஸ்தவர்கள் தங்களது தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகளை நடத்துவதுண்டு. பிறப்பிப்பதற்கு முன்பிருந்த காலம் பழைய ஏற்பாட்டு காலம் என்றும், கிறிஸ்து பிறப்பிப்பதற்கு பின்பிருந்த காலம் புதிய ஏற்பாட்டு காலம் என்றும் கூறப்படுகிறது. பழைய ஏற்பட்டு காலங்களில் இருந்தவர்கள், தங்களது பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும் என்றால், அதற்கு ஒரு ஆட்டுக்கு குட்டியை பலியிடுவார்கள்.

- Advertisement -

ஆசாரியன் அந்த ஆட்டுக்குட்டியை பலியிட்டு அந்த இரத்தத்தை அவர்கள் மீது தெளித்தால், அவர்களது பாவம் மன்னிக்கப்பட்டது என்ற ஒரு நம்பிக்கை இருந்தது.
ஆனால், புதிய ஏற்பாடு காலத்தில், இயேசு கிறிஸ்து உலக மக்களின் பாவத்தினை ஏற்று தன்னையே சிலுவை மரத்தில் பலியாக தந்ததால், ‘இயேசு கிறிஸ்து உலகத்தின் பாவங்களைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி’ என பைபிளில் கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

இயேசு கிறிஸ்து மக்களுக்கு நல்ல அறிவுரைகளை வழங்கினார். நோய்களை தீர்த்தும், உயிர் கொடுத்தும் நன்மை செய்தார். அவரது வழிகாட்டுதலை மக்கள் பின்பற்றினால், தங்கள் பிழைப்பிற்கு கேடு வரும் என சமயத்தலைவர்கள் அஞ்சி, அந்நாட்களில் தலைமை குருவாய் இருந்த காய்பாவின் மாமனாரான அன்னா அவரை கொலை செய்ய திட்டம் தீட்டினார்.

Good Friday in Tamil
Good Friday in Tamil

மக்கள் எல்லாருக்காகவும், மக்களின் பாவங்களை சுமந்து தீர்த்த ஆட்டுக்குட்டியாக, சிலுவையில் பலியானார். இதனை தான் மக்கள் அனைவரும் புனித வெள்ளி என்று அனுசரிக்கின்றனர்.

சிலுவை கற்றுக்கொடுக்கும் பாடம் என்ன?

சில ஆண்டுகளுக்குமுன் அமெரிக்காவிலுள்ள சிகாகோ நகரில் வாழ்ந்த மனிதர் ஒருவர் ஏதோ ஒன்றைத் தேடி எண்ணற்ற செப் வழிபாடுகளில் பங்குகொண்டார். வழிபாடு நடத்தியவர்களெல்லாம் மிக அருமையாக அறிவுரை வழங்கினார்கள். ஆனாலும் அவர் தேடியது அவருக்கக் கிடைக்கவில்லை! தான் தேடியது கிடைக்கவில்லையே என்ற கவலையில் படுத்தபடுக்கையானார். அவர் மரண வேளையிலிருந்தபோது அவருக்காகச் செபிக்க போதகர் ஒருவர் அவர் வீட்டுக்குச் சென்றார். அவரது படுக்கையின் பக்கத்தில் மண்டியிட்டு மன்றாடினார்.

அப்பொழுது அவருடைய கண்களிலிருந்து கண்ணீர்த்துளிகள் கீழே விழுந்தன. ஆண்டவரே இந்த அன்பு மகனை எடுத்துக்கொள்ளாதேயும் என உருக்கமாக செபித்தார். அதைப் பார்த்த படுக்கையிலே படுத்திருந்த மனிதர், இத்தனை ஆண்டுகளாக, நான் எதைத் தேடினேனோ அது இன்று எனக்குக் கிடைத்துவிட்டது. மற்ற போதகர்களெல்லாம் அவர்கள் விரும்பியதை எனக்குக் கொடுத்தார்கள். ஆனால் இவரோ நான் விரும்பியதை எனக்குக் கொடுத்திருக்கின்றார். என்னை அன்பு செய்யும் ஒருவரைத் தேடினேன். இனி எனக்குக் கவலையில்லை எனச் சொல்லி எழுந்து அமர்ந்தார்; அவரும் மாபெரும் போதகரானார்.

இதோ நமக்காக கண்ணீரைச் சிந்தி, நமக்காகத் தம் உயிரைத் தந்து நம்மீது அளவில்லா அன்பைப் பொழிந்திருக்கும் இயேசுவை ஒருமுறை உற்றுப்பார்ப்போம். மனம் திரும்ப விரும்பாத எருசலேமைப் பார்த்து அழுதவர் இவர்! (லூக் 19:41-44). இலாசரின் இறப்பைக் கண்டு அழுதவர் இவர்! (யோவா 11:35). நமது வேண்டுதல்கள் கேட்கப்படவேண்டும் என்பதற்காக கண்ணீர் சிந்தி கதறி மன்றாடியவர் இவர்! (எபி 5:7).

நமது ஆண்டவராகிய இயேசு நம்மீது அவர் கொண்டிருக்கும் ஆழமான அன்பை வெளிப்படுத்த கண்ணீரை மட்டுமல்ல, தமது உயிரையே நமக்குக் கொடுத்திருக்கின்றார் (யோவா 19:30).
எனக்காகக் கண்ணீர் சிந்தி, தம் உயிரையே கொடுத்த ஆண்டவர் இயேசு என்னோடு இருக்கும்போது எனக்கு எந்தக் குறையும் இருக்காது; அப்படியே
என் வாழ்க்கையில்,
முள் குறுக்கிட்டால் அதை அவர் மலராக மாற்றிடுவார்;
தேள் குறுக்கிட்டால் அதை அவர் தேனாக மாற்றிடுவார்;
சாவு குறுக்கிட்டால் அதை அவர் வாழ்வாக மாற்றிடுவார்
என நம்பி நமது வாழ்க்கைப் பயணத்தைத் தொடருவோம். தம் உயிரையே எனக்காகக் கொடுக்க முன்வந்திருக்கும் இயேசு. சாதாரண வரங்களை நான் கேட்கும்போது அவற்றை எனக்குக் கொடுக்காமலிருப்பாரோ? என நம்மையே நாம் கேட்டுக்கொள்வோம்.
மேலும் அறிவோம் :
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர் (குறள் : 228).
பொருள் : வறியவர்க்கு வேண்டியவற்றைக் கொடுத்து அவர் மகிழ்வதைக் கண்டு அருளுடையவர் அடையும் இன்பம் பெரிதாகும். அத்தகைய இன்பத்தைப் பற்றித் தெரியாதவரே தாம் சேர்த்த பொருளை ஏழை எளியோருக்கு வழங்காது பிறர் கொண்டு போக இழக்கும் இரக்கம் அற்றவர் ஆவர்!

 

kidhours – Good Friday in Tamil , Good Friday in Tamil essy, Good Friday in Tamil history

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

பொது அறிவுஉளச்சார்பு

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.