Thursday, April 18, 2024
Homeசிறுவர் செய்திகள்நோர்வேயில் நிமிடங்களில் கடலில் மூழ்கிய குடியிருப்புகள்! சுற்றுசூழல் தினத்தில் ஏற்பட்ட அசம்பாவிதம்

நோர்வேயில் நிமிடங்களில் கடலில் மூழ்கிய குடியிருப்புகள்! சுற்றுசூழல் தினத்தில் ஏற்பட்ட அசம்பாவிதம்

- Advertisement -

 

- Advertisement -
landslide-northern-norway-kidhours
landslide-northern-norway-kidhours

உலக சுற்றுசூழல் தினம் ஜூன் ஐந்தாம் திகதி கொண்டாடப்பட்ட வேளையில் நோர்வேயில் ஒரு தெருவே கடலுக்குள் மூழ்கிய வீடியோ வைரலாகியுள்ளது. இயற்கையை பேணி காப்பதையும், உலகம் வெப்பமயமாதலையும், சுற்றுசூழலை காப்பதையும் வலியுறுத்தும் வகையில் இன்று உலக சுற்றுசூழல் தினம் கொண்டாடப்படுகிறது.

தற்போதைய சூழ்நிலையில் உலகம் பல்வேறு பருவநிலை மாற்றங்கள் நிகழ்கிறது. இந்நிலையில் வியாழக்கிழமை நோர்வேயில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

நோர்வே நாட்டின் ஆல்டா கடற்கரை பகுதியருகே பல குடியிருப்புகள் உள்ளன.மக்கள் தங்கள் அன்றாட வேளைகளில் ஈடுபட்டிருந்த நிலையில் அந்நிலப்பகுதி எந்த அதிர்ச்சியும் இல்லாமல் கடலை நோக்கி நகர தொடங்கியுள்ளது.

- Advertisement -

சற்று நேரத்தில் இதனை உணர்ந்த மக்கள் உடனடியாக வீடுகளிலிருந்து வெளியேற ஆரம்பித்தனர். சிறிது நேரத்திலேயே கடலை நோக்கி சரிய தொடங்கிய நிலப்பரப்பு நிமிடங்களுக்குள் கடலுக்குள் மூழ்கியது.

எனினும் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என கூறப்படுகின்றது.8 வீடுகளில் வசித்தவர்களது உடமைகள் கடலில் மூழ்கிய நிலையில் அந்த பகுதியில் வசிக்கும் மற்ற மக்களும் பாதுகாப்பிற்காக வெளியேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.