penal-muthalidam-kidhours
penal-muthalidam-kidhours

நம் பண்பாட்டின் சாளரங்களாக விளங்கும் பண்டிகைகளிலும் பெண்களே முதலிடம் பெறுகின்றனர். வாசலில் போடப்படும் கோலம் முதல் கொண்டாட்டத்தின் அனைத்து அம்சங்களிலும் அவளின்றி ஓர் அணுவும் அசையாது என்பதே நிதர்சனம்.

மனித சமூகம் முன்னேற வேண்டுமானால், அங்கே ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமத்துவம் நிலவ வேண்டும். சாதிகள் அற்ற நிலையும், பாலின சமத்துவமும் எங்கே இருக்கின்றனவோ அந்த இடத்தில் தன்னிறைவு தானாகவே ஏற்படும். இந்த இரு சமத்துவங்களும் நமது தமிழரிடையே ஆதிகாலந்தொட்டே நிலவி வருகிறது. அதிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது நம்மிடம் பழங்காலத்திலேயே இருந்துள்ளது.

அவ்வையார் போன்ற புலவர் பெருமக்கள், குந்தவை நாச்சியார் முதலான அரசியல் ஆசான்கள், வேலு நாச்சியார், ராணி மங்கம்மா போன்ற வீராங் கனைகள் என தமிழகம் அனைத்துத் துறைகளிலும் பாலின சமத்துவத்தை நிலைநாட்டி வந்துள்ளது.

நாகரிகம் செறிந்த மேலைநாடுகளில் பெண்களுக்கான ஓட்டுரிமை ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்கு முன்புதான் கிடைத்துள்ளது. ஆனால் தமிழகத்தில் குடவோலை காலந்தொட்டே பெண்கள் ஓட்டளித்து வந்துள்ளனர்.

அதேபோல் அன்றாட வாழ்க்கையிலும், நம் பண்பாட்டின் சாளரங்களாக விளங்கும் பண்டிகைகளிலும் பெண்களே முதலிடம் பெறுகின்றனர். வாசலில் போடப்படும் கோலம் முதல் கொண்டாட்டத்தின் அனைத்து அம்சங்களிலும் அவளின்றி ஓர் அணுவும் அசையாது என்பதே நிதர்சனம். சித்திரைத் திருவிழாவும் பெண்களுக்கான பண்டிகையே.

ladiest-first-kidhours
ladiest-first-kidhours

இன்றைக்கு கல்வி, பொருளாதாரத் தன் னிறைவு போன்ற பல வழிகளிலும் தடம் பதித்துள்ள பெண்கள், அரசியலிலும் பெரும் பங்கு கேட்டுப் போராடி வருகிறார் கள். பொதுவாக சித்திரைத் திங்கள் மாம்பழ சீசன். ஆனால் இந்த சித்திரை பெண்களின் சீசனாக மலர வேண்டியது காலத்தின் கட்டாயம்.

அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி, அகத்திலே அன்பிலோர் வெள்ளம் என திகழும் பெண்களின் கரங்கள் உலகை ஆளவேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்த சமுதாயம் கட்டமைத்துள்ள போலிச் சங்கிலிகளை தகர்த்து, ஆக்க சக்திகளாக பெண்கள் அவதரிக்க வேண்டும்.