road_safety-kidhours
road_safety-kidhours

சாலைப் பாதுகாப்பு என்பது பூமியிலுள்ள ஒவ்வொரு நபரும் வாகனங்களைப் பயன்படுத்துகிறார்களோ இல்லையோ சரியான கவனம் செலுத்த வேண்டிய முக்கிய அடிப்படை அறிவாகும்

குழந்தைகள் மற்றும் மாணவர்களே சாலை விபத்துகளில் அதிகம் பாதிக்க படுகிறார்கள் ,எனவே குழந்தைகளுக்கு ஆரம்ப காலங்களிலேயே சாலை பாதுகாப்பு விதிகளை பின்பற்ற கற்று கொடுக்க பட வேண்டியது அவசியமானதாக ஒன்றாகும் .சாலை விதிகளை குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அடிப்படை அறிவாக புகட்ட வேண்டும்.

புள்ளிவிவரங்களின்படி, குழந்தைகள் சம்பந்தப்பட்ட சாலை விபத்து வழக்குகளே பெரும்பாலானவையாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது, எனவே தான் குழந்தைகளுக்கு சாலை பாதுகாப்பு பாடங்களை ஆரம்ப பள்ளிகலிலேயே கற்பிக்க படுகின்றன.

Road-Safety-for-Kids-13-Rules-Your-Kids-Should-Know-kidhours
Road-Safety-for-Kids-13-Rules-Your-Kids-Should-Know-kidhours

குழந்தைகளுக்கு பள்ளிகளில் நடத்தப்படும் சாலைப்பாதுகாப்பு படங்களுடன் கீழ்கண்ட முறைகளிலும் கற்பிக்க படுகின்றன

 • சாலைப்பாதுகாப்பு பற்றிய கட்டுரை எழுத சொல்லுதல்
 • சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு  ஓவிய போட்டி நடத்துதல்
 • சாலை பாதுகாப்பு பேச்சு போட்டி நடத்துதல்
 • வினாடி வினா போட்டிகள் நடத்துதல்
 • சிறு நாடகங்கள் நடத்துதல்
 • சாலை பாதுகாப்பு குறும்படங்கள் திரையிடுதல்
 • சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடித்தால்

இது போன்ற நிகழ்வுகளை பள்ளி கல்வி கற்கும் குழந்தைக்கு நடத்தும்போது பாடம் படிக்க வேண்டிய அவசியமே இல்லாமல் இயற்கையாகவே சாலை பாதுகாப்பு விதிகள் குழந்தைகளுக்கு கிடைக்கின்றன.

குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய சாலை விதிகள்

road-safety-kidhours
road-safety-kidhours

அதிவேகம் ஆபத்து :-
அதிகபட்ச வேகத்தில் வாகனங்கள் இயக்க படும் போதுதான் பெரும்பாலான விபத்துகள் நடை பெறுகின்றன ,எனவே மித வேகம் மிக நன்று என்ற வாக்கியத்தை மறக்க கூடாது

தலை கவசம் உயிர் கவசம் :-
விபத்தில் சிக்கும் மனிதர்களில் தலை கவசம் அணிந்தவர்கள் உயிருக்கு எந்த ஆபத்தும் விளைவதில்லை .எனவே தலை கவசம் அணியாமல் வாகனத்தை செலுத்த கூடாது .

இடதுபுறம் நடத்தல் :-
சாலையின் இடதுபுறமாக நடக்கும் பழக்கம் உடைய மனிதர்கள் சுலபமாக வாகனங்களுக்கு வழிவிட இயலுகிறது எனவே நடந்து செல்லும் போதும் வாகனங்களை இயக்கும் போதும் இடது புறமாக நடக்க வேண்டும்

தகுந்த இடத்தில சாலையை கடத்தல் :-
சாலையை கடக்கும் பொது அதற்கென உருவாக்க பட்ட வெள்ளை கோடுகள் வரைந்த பகுதியில் மட்டுமே கடக்க வேண்டும் .சிறு கவன குறைவும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற உண்மையை உணர்ந்து சாலையை கடக்க வேண்டும் .

கவன ஒலியில் கவனம் :-
வாகனங்களில் வரும் கவன ஒலியை (Horn Sound) கேட்ட உடனே திரும்பி பார்க்க வேண்டும் .திரும்பி பார்க்காமல் முன்னும் பின்னும் ஓட கூடாது

பாதுகாப்பு சைகைகள் :-
வாகன ஓட்டியாக இல்லாமல் போனாலும் வாகன ஒட்டி கொடுக்கும் சைகைகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும் .உதாரணமாக வலது புறம் திரும்பும் ஒரு வாகனதை ஓட்டும் ஒருவர் வலது புறமாக கையால் அல்லது இண்டிகேட்டர் மூலமாக கொடுக்கும் சமிங்கையை புரிந்து கொள்ளுதல் மிக அவசியமாகவும்

சிகப்பு மஞ்சள் பச்சை :-
சாலை பாதுகாப்பு நடவடிக்கையில் மிகவும் முக்கியமானது சாலை பாதுகாப்பு காவலர் கொடுக்கும் சிகப்பு,மஞ்சள்,பச்சை விளக்கு சமிக்கை என்ன என்று புரிந்து கொள்ளுதல் .

road-safety-essay-kidhours
road-safety-essay-kidhours

மேலும் சில முக்கிய சாலை விதிகள்

 • குடி போதையில் வாகனம் இயக்க கூடாது
 • பிரேக் மற்றும் பின்பார்க்கும் கண்ணாடியை தயாராக வைத்திருத்தல்
 • 18 வயது நிரம்பாதவர் களையும் குழந்தைகளையும் வாகனங்களை இயக்க விடாமை
 • கைபேசி பயன்படுத்திக்கொண்டு வாகனத்தை இயக்க கூடாது
 • பாதுகாப்பு சீட் பெல்ட் அணிந்து வாகனத்தை இயக்குதல்
 • தலைக்கவசம் பயன்படுத்துதல்
 • சாரதி அனுமதிப்பத்திரம்  இல்லாமல் வாகனம் ஓட்டுதல் குற்றமாகும்.

போதிய சாலை வசதிகளோ ,நல்ல சாலைகளோ இல்லாமல் இருந்தால் கூட,  சாலை விதிகளை பின்பற்றும் ஒருவர் எந்த ஆபத்திலும் சிக்குவதில்லை. எனவே சாலை பாதுகாப்பை வலியுறுத்தும் சாலை விதிகளை பின்பற்றி மகிழ்ச்சியாக வாழலாம் .