Friday, March 29, 2024
Homeசிந்தனைகள்பொதுவான சிந்தனைகள்சிறுவர்களின் சிந்தனை வெளிப்பாட்டுக்கு உதவும் சிறுவர் சித்திரங்கள்

சிறுவர்களின் சிந்தனை வெளிப்பாட்டுக்கு உதவும் சிறுவர் சித்திரங்கள்

- Advertisement -

சிறுவர் சித்திரங்கள்

- Advertisement -

உங்கள்பிள்ளைகளின் உள்ளார்ந்த ஆக்கத் திறன்களைத் தூண்டக்கூடிய ஒரு வழியே சித்திரம் வரைதலாகும். சித்திரம் வரையும் போது பல்வேறு பொருள்களைப் பயன் படுத்துகின்றனர். பொருள்களைக் கையாளும் போது புதிய கருத்துக்கள் தோன்றுகின்றன.

தெளிவற்ற தன்மையைக் கொண்டிருந்த எண்ணங்களும், மனப் பதிவுகளும் தெளிவுபடுகின்றமையினால் அவற்றை வெளியிடுதல் இலகுவாகின்றது.

- Advertisement -

பிள்ளையின் விவேகம், மனவெழுச்சிகளின் தன்மை, சமூக விருத்தி ஆகியன தொடர்பான தகவல்களை வெளிப்படுத்தும் மூலாதாரங்களாகச் சிறுவர் சித்திரங்களை ஆய்வு செய்வதில் உளவியலாளர்கள் கவனஞ் செலுத்தினர்.

- Advertisement -

விஞ்ஞானபூர்வமான இந்த ஆய்வுகளின் மூலம் சேகரிக்கப்பட்ட விடயங்கள் கலைத்துறை சார் கல்வியில் முக்கிய மாற்றங்கள் ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்தன.

சிறுவரின் உளத்தன்மைகளும் வெளியிடும் பாணியும் நேரடித் தொடர்புடையவை எனச் சில சிறுவர் சித்திர வல்லுனர்கள் நம்புகின்றனர். மன்ஸ், லொவன் ஃபீல்ட் ஆகியோர் இது தொடர்பாகத் தெரிவித்த கருத்துக்களைக் கவனித்தல் பயனுடையதாகும்.

சித்திரங்களால் காட்டப்படும் மனச் சார்புகளின் அடிப்படையில் சிறுவர்களைப் பிரதானமான இரு பிரிவுகளுக்குள் அடக்க முடியுமெனக் குறிப்பிடுகின்றனர்.

  1. கட்புல வகை(Visual)
  2. ஸ்பரிச வகை(Haptic)

சிறுவர் சித்திரங்கள்

கட்புல வகையைச் சேர்ந்த சிறுவர்கள் :

இவர்களின் ஆக்கம் தொடர்பான தூண்டுதல் சுற்றாடலின் மூலமே கிடைக்கின்றது. சுற்றாடலில் காணப்படும் பொருள்கள் அங்கிகள், நிகழ்வுகள் ஆகியன தொடர்பாக ஏற்படுத்திக் கொள்ளும் எண்ணக் கருக்களை (Concept)விருத்தி செய்வதில் அவர்களின் கண்கள் பிரதான இடம் வகிக்கிறது. ஸ்பரிச வகையைச் சேர்ந்த சிறுவர்கள் :

உடல் ரீதியாகக் கூர்மையான புலனுணர்வைக் காட்டுவர். அவர்களின் கவனம் புறச் சூழலின் பால் செலுத்தப் படுவதில்லை. பொருளைத் தொட்டுப் பெறக் கூடிய உணர்வையும் தமது உள்ளுணர்வுகளையுமே அவர்கள் வெளிக் காட்டுவர். எண்ணக் கருக்களை விருத்தி செய்வதில் தொடுகை முதலிடம் பெறுகின்றது. இவர்களைப் பொறுத்தமட்டில் கண்கள் பிரதான இடத்தை வகிப்பதில்லை.

கால்யூன் என்னும் உளவியலாளர் ஒருவரின் ஆர்வம், விருப்பு, பிடிப்பு, ஈர்க்கப்படும் அம்சங்களின் அடிப்படையில் பிள்ளைகளை இரு பிரிவுகளாக வகுத்துள்ளார்.

  1. புறச் சார்புடையோர் : ஒருவரின் ஆர்வம், விருப்பு பிடிப்பு புறச்சூழலின் பால் ஈர்க்கப்படின் அவர் புறச்சார்புடையோராகக் கருதப்படுவார்.
  2. அகச் சார்புடையோர் : பிரதானமாக ஒருவரின் அகச் சிந்தனை உலகின் பால் ஈர்க்கப்படின் அவர் புறச் சார்புடையோராகக் கருதப்படுவர்.

ஹேபேட் aட் என்பார் பெருந்தொகையான சிறுவர்களின் சித்திரங்களை ஆய்வுக்கு உட்படுத்தி சிறுவர்களின் சித்திரப்பாணிகளை எட்டாக வகைப்படுத்தினார்.

சிறுவர் சித்திரங்கள்

  1. சேதன மயமானது
  2. விபரண ரீதியானது
  3. மனப் பதிவு சார்ந்தது
  4. உளவியல் ரீதியானது
  5. ஒத்திசைக் கோலம் சார்ந்தது
  6. கற்பனை சார்ந்தது
  7. அலங்கார மயமானது
  8. அமைப்பு மாதிரியானது

சேதன மயமானது (Organic)

ஒரு சம்பவத்தின் அல்லது பொருளின் உயிர்ப்பான தன்மைகளை அவதானித்து அதன் செயற்படு தன்மையை மதித்து அதன் மூலம் திருப்தி பெறுவார்கள். ஒரு பொருளில் காணப்படும் வெவ்வேறு அம்சங்களையும் அவற்றுக்கிடையேயான அன்னியோன்னியத் தொடர்புகளையும் அத்தியாவசிய அம்சங்களையும் தொடர்புகளையும் இனங்கண்டு வலியுறுத்திக் காட்டுவார்கள்.

விபரண ரீதியானது (Enumerative)

சிறுவரின் ஈடுபாடுகள் தேவைகள், விருப்பு வெறுப்புக்கள், மனப்பாங்கு கள் ஆகியவை அவர்கள் புற உலகை கிரகித்துக் கொள் வதில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாததால் வெளிப்பாடு முற்றுமுழுதாகக் குறிப்பிட்ட விடயம் தொடர்பான தன்மையைக் காட்டும்.

ஒரு பொருளின் முக்கிய அம்சம் எது முக்கியத்துவம் குறைந்த அம்சம் எது பொருளின் பின்னணியில் காணப்படும் பொருள்களுக்கிடையிலான தொடர்புகள் யாவை? என்பன போன்ற விடயங்களைக் கவனித்து மதிப்பிடுவதில்லை எனவே அவ் வெளியீடு வலியுறுத்தல்கள் எதுவுமற்ற அறிக்கை போன்ற தன்மையுடையதாயிருக்கும்.

மனப் பதிவு சார்ந்தது (Impressionistic)

வெளியுலகின் பொருள்கள் சம்பவங்கள் என்பன தொடர்பாக மனதில் தோன்றும் உணர்வு சார்ந்த மன உந்தல்களை மீண்டும் விளக்கி அப்பொருள்களிலும், சம்பவங்களிலும் பிரதிபலிப்பதே இங்கு நடைபெறுகிறது. சித்திரத்தைக் கீறியோரின் மன உந்தல்கள் பிரதிபலிப்பதால் பொருளின் அடிப்படைத் தன்மை திரிபடைகிறது-

உளவியல் ரீதியானது  (Haptic)

புறச் சூழலில் இருந்து பெறப்படும் ஸ்பரிச உணர்வுகளுக்கும், புலன்களின் உதவியுடன் ஏற்படும் சுகதுக்க உணர்வுகளுக்கும் உருவம் கொடுப்பார்கள். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் படமும், பின்னணியும் பின்னிப் பிணைந்து காணப்படும். வெளிக்காட்டல் பூரணமாகவே தனியாள் சார்ந்ததாகக் காணப்படும்.

ஒத்திசைக் கோலம் சார்ந்தது (Rhythmic Patteras)

மனதில் நிலவுகின்ற உள்ளார்ந்த ஒழுங்கமைப்புத் திறனை இது குறிக்கின்றது. புறச் சூழலிலிருந்து பெற்றுக் கொள்ளும் அம்சங்களை (மலர்கள், மரங்கள், விலங்குகள், மனிதர்) போன்ற பின்னணியின் மீது மீண்டும் மீண்டும் (ஒத்திசைவாக) வரைவதன் மூலம் கோலம் ஒன்றினை வெளிக்கொணர்தல் இம்முறையின் முக்கிய தன்மையாகும்.

கற்பனை சார்ந்தது (Imaginative)

சிறுவர் சித்திரங்கள்

கற்பனை ரீதியில் ஆக்கப்பட்ட இவ்வுருக்கள் யதார்த்த உலகின் பொருள்கள்,சம்பவங்கள் போன்றவற்றிற்கு ஒத்ததாகக் காணப்படமாட்டாது.

உள ரீதியில் நிர்மாணிக்கப்பட்ட இப்படங்கள் அபூர்வமானவையாக அமையும். இதன் விளைவாக ஆக்கம் உயிர்ப்பான தன்மையைக் காட்டும்.

அலங்கார மயமானது (Decorative)

இரு பரிமாண வடிவங்களையும் வர்ணங்களையும் பயன்படுத்தி அலங்காரக் கோலங்களையும், உருவமைப்புக்களையும் நிர்மாணித்தல் இதில் அடங்கும்.

அமைப்பு மாதிரியானது (Structural Form)

மனதில் நிலவும் ஒழுங்கமைந்த திறன்களால் இவ் வெளியீட்டுப் பாங்கு தோன்றுகிறது.

சிறுவர் சித்திரங்கள்

பிள்ளைகளின் வரைதல் திறனை வளர்ப்பதற்குரிய வழிகள்

  1. பிள்ளைகளுக்கு நிறைவான அன்பையும், பாதுகாப்பையும் வழங்கல்
  2. மனதுக்குப் புத்துயிர் ஊட்டும் அறியும் ஆர்வத்தைத் தூண்டுதல்.
  3. புதிய ஆக்கங்களைப் பிறப்பிக்கும் ஆற்றலை மேலெழச் செய்து வளர்த்தல்
  4. சிறுவரின் உளச்சக்திகளை வெளிக்கொணர்வதற்கு சுதந்திரமான, சுமுகமான வகுப்பறைச் சூழலை ஏற்படுத்தல்.
  5. மாணவர்கள் வரையும் சித்திரங்களை வகுப்பறை மட்டத்திலும் பாடசாலை மட்டத்திலும் காட்சிப்படுத்தி பரிசு வழங்கல்.
  6. சுற்றுலாக்கள், வெளிக்களக் கற்கை நேரடி தரிசனம் போன்ற முறைகளைக் கையாண்டு மாணவர் மத்தியில் சிறந்த புலக்காட்சியை ஏற்படுத்த வழி வகுத்தல்.
  7. பாடசாலை மட்டத்தில் கோட்ட மட்டத்தில் வலய மட்டத்தில் சித்திரக் கண்காட்சிகளை நடத்தி பிள்ளைகளின் வரைதல் திறனை வளர்ப்பதற்கு ஆவன செய்தல்.

அறிதல் ஆட்சி விருத்தியும், விவேகவிருத்தியும் சித்திரம் வரையும் ஆற்றல் விருத்திக்கு அத்திவாரமாய் அமைகின்றன. புலன் அங்கங்களால் (கண், காது, மூக்கு, நாக்கு, தோல்) வெளி உலகம் தொடர்பாக பெற்றுக் கொள்ளும் தகவல்களைப் பொருளுள்ள விதத்தில் உள்ளம் ஒழுங்கமைத்துக் கொள்ளும் கருமத் தொடர் அறிதல் ஆட்சி எனப்படும்.

புலன் அங்கங்களின் முதிர்ச்சியும், மூளையினதும், மைய நரம்புத் தொகுதியினதும் வளர்ச்சியும் அறிதல் ஆட்சி அபிவிருத்தியில் ஆதிக்கம் செலுத்துகின்றது- அறிதல் ஆட்சி விருத்தியடைதல் எண்ணக் கருவாக்கத்திற்கும் விவேக விருத்திக்கும் ஏதுவாகின்றது. இவ்விருத்தியின் பின்னணியில் சிறுவர் சித்திரங்கள் வளர்ச்சியடைகின்றன.

படத்தை ஊடகமாகக் கொண்டு சிறுவர்களால் மேற்கொள்ளப்படும் வெளிப்பாடு அவர்களது முதிர்ச்சிக்கேற்ப எளிய நிலையில் இருந்து சிக்கலான நிலை வரை படிப்படியாக விருத்தியடைகிறது.

எளிய நிலையில் இருந்து சிக்கலான நிலை வரை ஏற்படும் விருத்தி தொடர்பாகச் சிறுவர் சித்திரங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட போது அறிந்துகொள்ள முடிந்த சில விடயங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

  1. சித்திரம் வரைவதில் சிறுவர் காட்டும் அபிவிருத்தி ஒரு குறிப்பிட்ட (ஊகித்தறியக் கூடிய) கோலத்திற் கேற்ப நிகழ்கின்றது-
  2. இக்கோலம் தனித் தனியாக இனங் காணக் கூடிய பல படிகளைக் கொண்டது.
  3. இப்படிகளின் ஒழுங்கு முறை அனைவருக்கும் பொதுவானது.
  4. ஒரு படியிலிருந்து அடுத்த படிக்குச் செல்வதற்குச் செலவாகும் காலம் சிறுவருக்கேற்ப வேறுபடும்.

சிறுவர் சித்திரங்கள்

“Mental and Scholastic Test” என்னும் நூலில் சிரில் பேட் சிறு வர் சித்திர அபிவிருத்திப் படிகளை விளக்கி உள்ளார். சிறுவர் சித்திரங் களை பின் வரும் அம்சங் களின் கீழ் அவ தானிக் கலாம்.

  1. மனித உருவங்களை வரைதல்
  2. வெளியைக் காட்டுதல்
  3. நிறங் களைப் பயன் படுத்துதல்
  4. திட்டமிடல்

அழகிய சித்திரங்களின் மூலம் பிள்ளைகளின் வரைதல் திறனை வளர்ப்போம்.

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.