சூழல் என்பது எம்மை சுற்றியுள்ள அனைத்துமே சூழல் ஆகும் ,இவற்றில் உயிர் உள்ளவை ,உயிரற்றவை என அனைத்தும் உள்ளடக்கப்படும் இவ்வாறு எம்மை சூழவுள்ளவற்றால் மனிதன் அதிக நன்மையை பெற்று உயிர்வாழ்கின்றன் அதாவது சூழலின் குழப்ப நிலையினாலே பாதிப்புக்களுக்கு முகம் கொடுக்கிறான்.

soolal masadaithal

சுற்றுச்சூழல் சூழல் மாசடைதல் என்பது மனித செயல்கள் மூலம் உருவாகும்

மாசுகளால், பூமியின் அடிப்படை கூறுகள் குழப்பமடைகின்றன அதாவது நிலம், நீர்,காற்று,என்பன சூழலில் வாழும் உயிரினங்களும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன ,சூழலுக்கும் அங்கே வாழ்ந்துவரும் உயிரினங்களுக்கும் கேடு விளைவிக்கக்கூடியவையின் சேர்க்கையால் சூழற் சமநிலை பாதிக்கப்படும்.

முதலாவதாக நீர் மாசடைதலானது மிக முக்கிய பிரச்சனையாக காணப்படுகின்றன. அதாவது மனிதன் தனது கழிவு பொருட்களை தண்ணீரில் கொட்டுதல்,நீரை வீண் விரயம் செய்தல்,கிருமிநாசினிகளை பயன்படுத்தும்போது அவை நீரில் கலத்தல் ,தொழிசாலை கழிவுகளை கொட்டுதல்,நீருக்கு அடியில் அணுகுண்டு பரிசோதனைகள் மேற்கொள்ளல் என்பன பாரியளவில் நீரை மாசடைய செய்கின்றன.இவ் நீரை மாசடைதலால் தொற்று நோய்கள் மற்றும் வறட்சி என்பன அதிகரிக்கும் ஆகவே இவ்வாறான நீர் மசைத்தலை தடுக்கும் வழிகளாக

மழை நீரை சேமித்தல்,குப்பைகூளங்களை கொட்டுவதை தடுத்தல் ,நீரை மாசடையும் விதத்தில் செயற்படுவோரின் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுத்தல் , மாணவர்கள் மற்றும் மக்களுக்கும் நீரின் முக்கியத்துவம் மற்றும் சரியான முகாமைத்துவம் பற்றிய விழிப்புணர்வை வழங்குதல் அத்ததுடன் சர்வதே ரீதியில் சட்டங்களை அமுல்படுத்தல்.

அடுத்ததாக நிலம் மாசடைதல் முக்கியமான ஒரு பிரச்சனையாகும் கனியன்களின் சேர்க்கை மண் எனப்படும். இவை மண் அகழ்தல்,காடுகளை அழித்தல் ,குப்பைகூளங்களை நிலத்தில் போட்டு புதைத்தல் உதாரணமாக பிளாஸ்ட்ரிக் பொருட்கள்,மற்றும் அணுகுண்டு பரிசோதனைகள் ,உள்நாட்டு யுத்தம்,விவசாயத்திற்கு கிருமிநாசினைகள் பயன்படுத்தல் ,இரசாயன பசளை பயன்படுத்தல், பாரிய அனர்த்தங்கள் ஏற்படல் உதாரணமாக சுனாமி,நிலநடுக்கம்,மண்சரிவு, எரிமலை என்பனவற்றை குறிப்பிடலாம்.

அதே போன்று இவ்வாறான பாதிப்புக்களால் நிலம் வளம் இழந்து விடும் இதனால் விவசாயம் பாதிக்கும் ,உணவு பஞ்சம் ஏற்படும் ,வறட்சி ,வெப்ப அதிகரிப்பு ஏற்பட்டு தொற்று நோய்கள் உருவாகும் .

இவற்றை தடுப்பதற்கான வழிமுறைகளாக ,காடுகளை அழிப்பதை தடுத்தல்,மண்பாதுகாப்பு திட்டங்களை முன் மொழிதல் ,மக்களுக்கு விழிப்புணர்வூட்டல்,இயற்க்கை பசளைகளை பயன்படுத்தல், சுழற்சி முறையில் விவசாயத்தை மேற்கொள்ளல் என்பனவற்றை பொதுவாக குறிப்பிடலாம் .

அடுத்ததாக வளி மாசடைதலை குறிப்பிடலாம் வளி என்பது எம்மை சூழவுள்ள வளிமண்டலமாகும். இவ் வளி மண்டலமானது மனிதன் மற்றும் எல்லா உயிரினங்களுக்கும் உயிர் வாழ்வதற்குரிய முக்கிய கூறு ஆகும் இந்த உலகமே தங்கியிருப்பது இந்த வளிமண்டலத்தாலேயே தான் இருப்பினும் காடுகளை அழித்தல் ,அணுகுண்டுகளை பரிசோதனை செய்தல், கிருமி நாசினிகளின் பயன்படுத்தல், அணுகுண்டுகளை பயன்படுத்தல் மற்றும் பரிசோதனை செய்தல் என்பவற்றால் அதிகளவு வளி மாசடைந்து வருகின்றது. இதனால் இவற்றின் பாதிப்புக்கள் எண்ணில் அடங்காதவை உலகில் சனத்தொகை வளர்ச்சிக்கேற்ப தொழில்நுட்பமும் விருத்தியடைந்து வருகின்றது தொழிற்சாலைக்கிளின் கழிவு வாயுக்கள் ,வகை புகை ,அணுகுண்டு தாக்குதல் ,விண்வெளி பயண முயற்சி மற்றும் காடுகளை அழித்தல் என்பன அதிகமாக வளியை மாசடைய செய்கின்றன.

இவ்வாறான செயற்பாடுகளால் சுவாசநோய்கள் , தோல் நோய்கள் என்பன அதிகரித்து வருவதுடன் பூமி வெப்பமாதலுக்குற்படுகின்றது இதனால் பனிக்கட்டிமலை உருகுதல் ,தற்ப வெப்பநிலை அதிகரித்தல், காலநிலை மாற்றம் ஏற்படல் போன்ற பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன

இவற்றை தடுப்பதற்க்கான வழிமுறைகளாக முதலில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தல், கழிவு பொருட்கள் மற்றும் வாயுக்களை மீள்சுழற்சிக்குட்படுத்துதல்,ஈயமற்ற பெற்றோல் பயன்படுத்தல் ,கட்டுவளத்தை பாதுகாத்தல் மற்றும் நச்சு வாயுக்கள் வெளிவிடப்படுவோர்க்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தல் என்பவற்றி ஊடாக வளிமண்டலத்தை பாதுகாத்து கொள்ளலாம் . இவற்றோடு இணைந்து உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன எம்மை சூழ்ந்து காணப்படுகின்ற அனைத்தும் தன்னிலை மாறி குழப்பமடைகின்றது இவற்றயே நாம் சூழல் குழப்பமடைதல் அல்லது சூழல் மாசடைதல் என்போம்.