Canada Earthquake உலக காலநிலை செய்திகள்
கனடா நாட்டில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் தாக்கின.
அதாவது கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தை, நேற்று இரண்டு நிலநடுக்கங்கள் அதிரவைத்துள்ளன.
நேற்று மாலை (15.09.2024) 3.20 மணிக்கு, வான்கூவருக்கு வடக்கே அமைந்துள்ள Haida Gwaii என்னுமிடத்தில், ரிக்டர் அளவுகோலில் 6.5 அளவாக பதிவான நிலநடுக்கம் ஒன்று உருவாகியுள்ளது.பின்னர், அதே இடத்தில், ஒரு மணி நேரத்துக்குப் பின் ரிக்டர் அளவுகோலில் 4.5 அளவாக பதிவான நிலநடுக்கம் ஒன்று தாக்கியுள்ளது.
அத்துடன் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. அத்துடன், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த எந்த செய்தியும் வெளியாகவில்லை.
Kidhours – Canada Earthquake
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.