Man Made Earthquake புவியியல்
கடந்த ஒக்டோபர் 5ஆம் திகதி இரவு சுமார் 10.45 மணியளவில், மத்திய கிழக்காசிய நாடான ஈரானில்(iran) ரிக்டர் அளவுகோலில் 4.6 என்ற அளவில் வலுவான நிலநடுக்கம்(earth quake) ஏற்பட்டது.
குறித்த நிலநடுக்கத்தின் மையம் ஈரானின் செம்னான் மாகாணத்தில் உள்ள அரடன் நகருக்கு அருகில் 10 கி.மீ தொலைவில் நிலத்தடியில் பதிவாகியுள்ளது.நிலநடுக்கத்தின் அளவு ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து 110 கிலோமீட்டர் தொலைவில் உணரப்பட்டது.
ஈரானை உலுக்கிய நிலநடுக்கத்திற்கு ஈரான் புரட்சிப் படை இரகசியமாக பூமிக்கடியில் அணு ஆயுத சோதனை நடத்தியதே காரணம் என இஸ்ரேல் சந்தேகம் வெளியிட்டுள்ளது. மேலும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தும் நோக்கில் ஈரான் அணு ஆயுத சோதனை நடத்தி வருவதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.
அத்துடன் ஈரானின் அணுசக்தி திட்டத்தால் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டின் எரிசக்தி நெருக்கடிக்கு தீர்வாக ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை தொடங்கியுள்ளது.
இருப்பினும், ஈரான் அணு ஆயுதங்களை இரகசியமாக தயாரித்து வருவதாக இஸ்ரேல்(israel) குற்றம் சாட்டுகிறது.இதற்கிடையில், ஈரான் சமீபத்தில் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசியதற்கு பதிலடியாக ஈரானைத் தாக்கி, ஈரானிய ஆட்சியைக் குறைமதிப்பிற்கு உட்படுத்த நடவடிக்கை எடுப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Kidhours – Man Made Earthquake
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.