Earthquake in Europe புவியியல்
ஐரோப்பிய கண்ட நாடாகிய இத்தாலியில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நாட்டின் நேப்பிள்ஸ் நகரத்தில் நேற்று அதிகாலை 1.25 மணியளவில் 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த 40 ஆண்டுகளில் அந்நகரத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.அரச நிறுவனங்கள்
“நிலநடுக்கம் அபாயமுள்ள பகுதியான ப்ளெக்ரேயன் வயல்களின் பொஸ்ஸோலி பகுதியில் 3 கி.மீ. ஆழத்தில் இந்த நில அதிர்வானது பதிவு செய்யப்பட்டது” என கூறுகின்றன.
பக்னோலி மாவட்டத்தில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய மக்களை மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர். இருப்பினும், இந்த நிலநடுக்கத்தின் பாதிப்புகள் குறித்த முழுமையான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.அதேவேளை நேப்பிள்ஸ் நகரமானது நில அதிர்வு அபாயமுள்ள ப்ளெக்ரேயன் வயல்கள் எனும் மிகப் பெரிய அளவிலான எரிமலையின் பெருவாயின் மீது காணப்படுவது குறிப்பிடதக்கது.
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.