Thursday, March 28, 2024
Homeகல்விபொது அறிவு - உளச்சார்புஉலகின் வசதியான நகரம் எது தெரியுமா? World Most Comfortable City

உலகின் வசதியான நகரம் எது தெரியுமா? World Most Comfortable City

- Advertisement -

World Most Comfortable City பொது அறிவு செய்திகள்

- Advertisement -

இன்றைய காலகட்டத்தில் குடும்பம், குழந்தைகள், என்று எல்லா பொறுப்புகளும் இருந்தாலும் நிம்மதியான வாழ்க்கை என்பதை நோக்கி மக்கள் நகர ஆரம்பித்து விட்டனர்.

நான்கு சந்ததிகளுக்கு சம்பாதித்து சேர்த்து வைக்கும் பழக்கம் இன்றைய இளைய சமூகத்திடம் குறைந்து வருகிறது. பிரீலான்ஸ் வேலை செய்து வாழ்தல் போதுமானது என்று இருக்கின்றனர்.

- Advertisement -

அப்படி பிரீலான்ஸ் வேலை செய்யும் கலைஞர்கள் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழக்கூடிய நகரங்களை ஸ்வீடனின் ஆம்ஸ்டர்டாம் நகரைச் சேர்ந்த ஒரு இணையதளம் ஆராய்ந்து பட்டியலிட்டுள்ளது.

- Advertisement -

உலகில் உள்ள அனைத்து நாடுகளில் இருந்து சுமார் 117 நகரங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின் அடிப்படையில் ஒரு பட்டியலும் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

அந்த பட்டியலில் உலகின் மிகவும் வசதியான நகரமாக செக் குடியரசு நாட்டின் தலைநகரமான பிராக்(Prague) இடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு முதல் இடம் பிடித்திருந்த போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த லிஸ்பன்(Lisbon) நகரம் இந்த ஆண்டு பட்டியலில் 3 ஆவது இடத்தை பிடித்துள்ளது. பட்டியலில் 2 ஆவது இடத்தில் ஸ்பெயினின் செவில்லே(Seville) உள்ளது

வாழ்கை தரம் மற்றும் பணத் தேவையை வைத்து பட்டியலிடப்பட்ட நகரங்களில் முதல் இடம் பிடித்துள்ள செக் நாட்டு தலைநகரான பிராக், குறைந்த பணத்தில் சொகுசு வாழ்க்கை, கிரியேட்டிவ் சுதந்திரம், இணையவசதி என அனைத்திலும் முன்னேறி உள்ளது.

அதுமட்டும் அல்லாமல், தாய்லாந்தின் சியாங் மை, பேங்காக் பாலி ஆகிய இடங்களை விட சுத்தம், பாதுகாப்பு, பேச்சு சுதந்திரம், பொதுப் போக்குவரத்து, தரமான காபி, உணவு என அனைத்து விஷயங்களிலும் பிராக் முன்னிலை பெற்றுள்ளது

 

 

Kidhours – World Most Comfortable City

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.