World Biggest Airport பொது அறிவு செய்திகள்
துபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது (Sheikh Mohammed) உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையம் டுபாயில் (Dubai) அமைக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தற்போது டுபாயில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை புதிய திட்டத்துக்கு மறுசீரமைப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய விமான நிலையம் அமைக்கப்படுமெனவும் ஷேக் முகமது தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில் கூறியுள்ளார். மேலும் “தற்போது டுபாயில் உள்ள விமான நிலையத்ததை விட புதிதாக உலகின் மிக பெரிய விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது.
35 பில்லியன் அமெரிக்க டொலர் செலவு மதிப்பில் குறித்த விமான நிலையம் கட்டப்பட உள்ளது என்பதுன்ன் குறிப்பிட தக்கது . புதிய விமான நிலையம் தற்போதயத்தைவிட 5 மடங்கு பெரியதாக இருக்கும்.
இந்த விமான நிலையத்தில் 400 வாயில்கள் மற்றும் 5 ஓடுபாதைகளும் அமைய உள்ளது. சுமார் 260 மில்லியன் பயணிகளை உள்ளடக்கும் வகையில் உலகின் மிகப்பெரிய திறன் கொண்ட விமான நிலையமாக இது இருக்கும்.
டுபாய் விமான போக்குவரத்து துறை, முதன் முறையாக இந்த விமான நிலையத்தில் புதிய விமான தொழில்நுட்பங்களை காண உள்ளது.
மேலும், விமான நிலையத்தை சுற்றி ஒரு முழு நகரம் கட்டப்படும். இந்த புதிய விமான நிலையம் அல்மக்தூம் சர்வதேச விமான நிலையம் என்று அழைக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
Kidhours – World Biggest Airport
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.