Wednesday, October 9, 2024
Homeபொது அறிவு - உளச்சார்புசர்வதேச தினங்கள்சர்வதேச ஜனநாயக தினம் செப்டம்பர் 15 International Democracy Day

சர்வதேச ஜனநாயக தினம் செப்டம்பர் 15 International Democracy Day

- Advertisement -

International Democracy Day  பொது அறிவு செய்திகள்

- Advertisement -

உலகத்தில் சாந்தி சமாதானம் பற்றி பேசும் அதற்கு இணையான இந்த ஜனநாயகம் பற்றியும் அறிந்திருக்கவேண்டியுள்ளது.

அதாவது ஜனநாயகம் என்பது ஒரு வழிமுறை. அது ஒரு இலக்கும் கூட. சர்வதேச சமூகத்தின் முழு பங்களிப்பு மற்றும் ஆதரவுடன் எட்டப்பட வேண்டிய இலக்கு ஆகும் . அதாவது தனிநபர்கள், பொதுச் சமூகம், அரசாங்கம் என அனைத்திற்கும் இதில் பங்கு இருக்கிறது. எங்கேயும், எப்போதும், எல்லோராலும் அனுபவிக்ககூடியதே ஜனநாயம் – இப்படித்தான் ஜனநாயகம் குறித்து ஐ.நா. தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் விளக்கம் கொடுத்துள்ளது.

- Advertisement -

யோசித்துப் பாருங்களேன்.. நாம் என்ன சாப்பிட வேண்டும், உடை உடுத்த வேண்டும், எந்த மொழியைப் பேச வேண்டும், என்ன படிக்க வேண்டும், என்ன வேலை செய்ய வேண்டும், என்று எல்லாவற்றையும் யாரேனும் ஒருவர் தீர்மானித்து நிர்பந்தித்தால் அந்த வாழ்க்கை எப்படி இருக்கும் என்று?! அப்படியான சங்கிலிகள் நம் கை, கால்களிலும், எண்ணங்களிலும் பிணைக்கப்படாமல் நம் வாயில் இருந்து வரும் வார்த்தைகளுக்கு தடை இல்லாமல் இருந்தால் நாம் ஜனநாயக நாட்டில் தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதே உண்மை.

- Advertisement -

அப்படி ஒரு ஜனநாயாக நாடு உருவாக அதில் மக்களின் பங்களிப்பு இருக்க வேண்டும். ஏனெனில், ஜனநாயகம் என்பது அனைத்து குடிமக்களின் சமமான பங்களிப்புடன் நடைபெறும் ஒரு வகையான மக்களாட்சி. அந்த மக்களாட்சியைக் கொண்டாட ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15ஆம் தேதி சர்வதேச ஜனநாயக நாள் கடைபிடிக்கப்படுகிறது.

ஜனநாயகத்தை வலுப்படுத்தவும் அதன் மாண்பினையும் கோட்பாட்டினையும் உலகம் முழுவதும் பரவலாக்கவும் இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது. இன்று சர்வதேச அளவில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலான நாடுகளிலேயே மன்னராட்சி நடைபெறுகின்றன.

அந்தவகையில் இன்று ஜனநாயகத்தின் பொருள் ஒரு குறிப்பிட்ட வரையறைக்கு உட்பட்டதாக இருக்கிறது. மக்கள் தங்களுக்கு பிடித்தமான அரசை தேர்ந்தெடுக்க வேண்டும். அரசு மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்பட வேண்டும் என்பதே அது. அந்த வரையறைக்குள் அடங்காத அரசு ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டாலும் கூட அது சர்வாதிகார அரசு தான்.

சர்வதேச ஜனநாயக தின வரலாறு: ஐ.நா. பொதுச் சபை கடந்த 2007ஆம் ஆண்டு ஒரு தீர்மானம் நிறைவேற்றியதனை தொடர்ந்து 2008ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் செப் 15ஆம் தேதி சர்வதேச ஜனநாயக தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஜனநாயகம், அமைதி, நீடித்த வளர்ச்சிக்கு ஊடக சுதந்திரத்தின் அவசியம் என்ற கருத்தாக்கத்துடன் கடைபிடிக்கப்படுகிறது.

International Democracy Day  பொது அறிவு செய்திகள்
International Democracy Day  பொது அறிவு செய்திகள்

ஜனநாயகம் என்றால் என்ன?: ஜனநாயகம் என்றால் நியாயமான நேர்மையான தேர்தலை சரியான இடைவெளியில் நடத்தி மக்கள் தாங்கள் விரும்பும் ஆட்சி அமைய வழிவகை செய்தல். ஜனநாயகத்தில் அரசியல், பொது உரிமைகளுடன் வாக்களிக்கும் உரிமையும் முக்கியத்துவம் வாய்ந்தது. கருத்துச் சுதந்திரமும், அரசியல் கட்சிகளை உருவாக்கி, அரசியல் பழகும் உரிமையும் இதில் அடங்கும்.

ஒரு ஜனநாயகம் பொதுமக்களுக்கு பொறுப்புக் கூடலை உறுதி செய்வதாக இருக்க வேண்டும். இது பொது பொறுப்பில் உள்ள அனைவருக்கும் பொருந்தும். ஜனநாயக நடைமுறைகளில் தனிநபர்களின் பங்களிப்பு எவ்வித பாகுபாடு இன்றியும் உறுதி செய்யப்பட வேண்டும்.

 

Kidhours – International Democracy Day

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.