Friday, December 6, 2024
Homeசிறுவர் செய்திகள்சூரிய குடும்பத்தின் அதிசய நிகழ்வு Miracle of the Solar System

சூரிய குடும்பத்தின் அதிசய நிகழ்வு Miracle of the Solar System

- Advertisement -

Miracle of the Solar System  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு ஒரு சில வாரங்களில் கோள்கள் ஒழுங்குமுறையான அணிவகுப்புடன் வலுவான ஆரம்பமாக அமையும் என்று வானியலாளர்கள் கூறியுள்ளனர்.

அதாவது புதிய ஆண்டில் கோள்கள் அணிவகுப்பு என்பது சூரிய குடும்பத்தின் பல கிரகங்கள் ஒரே நேரத்தில் இரவு வானில் தெரியும்.
அதாவது , வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, நெப்டியூன் மற்றும் யூரேனஸ் ஆகிய ஆறு கோள்கள் 2025 ஜனவரி 21 ஆம் திகதிக்கு முந்தைய நாட்களிலும், அதன் பின்னர் சுமார் நான்கு வாரங்களிலும் தெரியும்.

- Advertisement -
Miracle of the Solar System  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Miracle of the Solar System  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

குறித்த ஒழுங்கமைப்பில் செவ்வாய், வெள்ளி, வியாழன் மற்றும் சனி ஆகிய கோள்கள் வெறும் கண்களுக்குத் தெரியும். நெப்டியூன் மற்றும் யுரேனஸ் ஆகிய கோள்களைக் கண்டறிய, தொலைநோக்கி போன்ற உயர் ஆற்றல் கொண்ட பார்க்கும் கருவிகள் தேவைப்படும்.

- Advertisement -

அதாவது வடக்கு அரைக்கோளத்தில் இருந்து கிரகங்களைப் பார்க்க சிறந்த நேரம் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு இரவு 8:30 மணி ஆகும்.
இந்த ஆறு கோள்களையும் 2025 பெப்ரவரி மாதத்தின் இறுதி வாரம் வரை இரவில் பார்க்க முடியும்.

அதன் பின்னர், புதன் கோளும் சில நாட்களுக்கு ஏனைய கோள்களுடன் இணைவதனால், ஏழு கிரக அணிவகுப்பு தொடங்கும்.
குறித்த கோள்களின் அணிவகுப்பானது அமெரிக்காவில் மட்டுமின்றி மெக்சிகோ, கனடா மற்றும் இந்தியாவிலும் கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கு உரிய காலமாக 2025 ஜனவரி 21 தொடக்கம் பெப்ரவரி 21 ஆம் திகதிக்கு இடையில் இருக்கும்.

ஜனவரி 29 ஆம் திகதி அமாவாசையின் வாரத்தில் கிரக அணிவகுப்பைப் பார்க்க மிகவும் பொருத்தமான காலமாக இருக்கும் என்றும் வானியலாளர்கள் கூறுகின்றனர்.
Kidhours – Miracle of the Solar System

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.