Tuesday, June 6, 2023
Homeபொழுது போக்குமூலிகைகளை சேகரிப்போம்வேப்ப மரத்தின் மூலிகைக்குணங்கள் Neem Tree Herbal

வேப்ப மரத்தின் மூலிகைக்குணங்கள் Neem Tree Herbal

- Advertisement -

Neem Tree Herbal மூலிகைகளை சேகரிப்போம்

- Advertisement -

பொதுவாக வேம்பு கசக்கும். ஆனால், வேப்பர மர இனங்களில் சர்க்கரை வேப்ப மரம் என ஒரு ரகம் உள்ளது. இதன் இலையை அருந்த வாயெல்லாம் தித்திக்கும். காயம் சித்தியாகும். சிலேட்டுமம் அறும். தூய விந்து நாதம் சுத்தியாகும். இவ்வாறு சர்க்கரை வேம்பு குறித்து சித்தர் மகான் சிறப்புறச் செப்பியுள்ளனர்.பிற வேம்பு வகையில் கருவேப்ப மரம், மலை வேப்ப மரம் ஆகியவை உள்ளன. ஆயினும் இவற்றின் இலை, கொழுந்து, பூ, முத்து, குச்சி, காய், பழம், பட்டை ஆகிய இயற்கைச் சாதனங்களும், படைப்புகளான நெய், பிண்ணாக்கு, பொடி முதலானவற்றின் பயன்பாடுகளில் மாறாத மருத்துவக் குணங்கள் மருவியுள்ளன

இதில் 32 க்கும் மேற்பட்ட தாவர இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மனிதனை வாழவைக்கும் அமுத சுரபியாகும். தாவரவியல் பெயர் அசாடிரக்டா இன்டிகா (AZADIRACHTA INDICA Adv.Juss ). தாவரக்குடும்பம் மீலியேசி (Meliaceae).

- Advertisement -

 

- Advertisement -

21-ம் நூற்றாண்டின் மரமாக (Tree of the 21st century) ஐநா-வால் அறிவிக்கப்பட்ட வேப்ப மரம், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்ததும், மனித குலத்தின் மிகத் தொன்மையான மருத்துவங்களில் ஒன்றுமான சித்த மருத்துவத்தில் மருத்துவ குணம் மிக்க செடி / மரங்கள் பட்டியலில் முதலாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது இதிலிருந்தே தொன்மையான சித்த மருத்துவத்தின் பெருமையை நாம் உணர்ந்து கொள்ளலாம்.
பார்க்கும் போதே கண்களுக்கும் மனதிற்கும் இதமாக இருப்பதோடு எண்ணற்ற பலன்களை அளிப்பதாகவும், அதன் ஒவ்வொரு பகுதியும் மருத்துவ குணங்கள் நிறைந்ததாகவும் அமைந்திருக்கும் வேப்ப மரம், பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம் முன்னோர்களால் பல்வேறு நோய்கள் தீர்க்கப் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.

பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம் முன்னோர்கள் மருத்துவமாகப் பயன்படுத்தி வந்த வேப்ப மரத்தைப் பற்றிய, அதன் மருத்துவ குணங்கள் பற்றிய ஆய்வுகளைச் சமீப வருடங்களில் நவீன மருத்துவ உலகம் வீரியத்துடன் செய்து வருகிறது. அப்படிப்பட்ட ஆய்வுகளில் ஒன்றின் மூலம், biofilm உருவாவதைத் தடுக்கும் திறன் வேப்பிலைச் சாறுக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பொதுவாகக் காணப்படும் நோய்க்கிருமிகளில் மூன்றாவது இடத்தில் இருக்கும் pseudomonas aeruginosa, பல்வேறு தொற்றுகளை உருவாக்கக்கூடியது. இந்நோய்க் கிருமியின் காரணமாக உருவாகும் biofilm, தொடர் தொற்றுக்களை உருவாக்கக் கூடியது. ஒரு biofilm-ல் இருக்கக் கூடிய நுண்ணுயிரிகள் 50 முதல் 500 மடங்கு அதிக அளவு எதிர்ப்புகளைத் தாங்கக் கூடியதாகையால் அவற்றை அழிப்பது மிகக் கடினமானது. இத்தகைய சூழலில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், வேப்பிலைச் சாறு biofilm உருவாவதைத் தடுக்கும் திறன் கொண்டுள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது.

தன் ஒவ்வொரு பகுதியும் மருத்துவமாகப் பயன்படும் வேப்பிலையின் தன்மைகளில் சில, ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. வேப்பிலையின் சில முக்கிய தன்மைகள்:

Anti-inflammatory (வீக்கம், வலி போக்குதல்)
Antibacterial (bacteria-வை அழித்தல் மற்றும் தடுத்தல்)
Antifungal (fungi-யை அழித்தல் மற்றும் தடுத்தல்)
Antimicrobial (bacteria, virus மற்றும் fungi-களை அழித்தல் மற்றும் தடுத்தல்)
Antiviral (virus-ஐ அழித்தல் மற்றும் தடுத்தல்)
Antimalarial (malaria-வைத் தடுத்தல்)
Antioxidant (cells, protein மற்றும் DNA-விற்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுத்தல்)
Antiarthritic (மூட்டுவாதம் ஏற்படாமல் தடுத்தல்)
Antipyretic (சுரத்தைப் போக்குதல் மற்றும் தடுத்தல்)
Antiseptic (தொற்றுகளைத் தவிர்த்தல் அல்லது குறைத்தல்)
Antimutagenic (கதிர்வீச்சு போன்றவற்றால் DNA-விற்கு ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்த்தல்)
Diuretic (சிறுநீர்ப் பிரித்தல்)
Antiulcer (வயிற்றுப்புண்ணைதவிர்த்தல்)
Antitumor (கட்டிகளைத் தவிர்த்தல்)
Anticancer (புற்று நோய் ஏற்படாமல் தவிர்த்தல்)
Antigingivitis (ஈறுகள் சார்ந்த பிரச்சினைகளைத் தவிர்த்தல்)
Hepatoprotective (கல்லீரலைப் பாதுகாத்தல்)
Neuroportective (நரம்பு அணுக்களைப் பாதுகாத்தல்)
Immunomodulatory (உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலைச் சீராக்குதல்)
Hypoglycaemic (இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைத்தல்)
Spermicidal (விந்தணுவை அழித்தல்)
Hypolipidemic (கொழுமியத்தைக் குறைப்பது)

Neem Tree Herbal மூலிகைகளை சேகரிப்போம்
Neem Tree Herbal மூலிகைகளை சேகரிப்போம்

வேப்பங்கொழுந்தை உட்கொண்டால் குடற்புழுக்கள் நீங்கும்; செரிமானம் மேம்படும்.

வேப்பிலையின் கொழுந்தை தினம் உட்கொள்பவர்களுக்கு இரத்தத்தில் விஷப் பூச்சிகளின் விஷம் வேகமாகப் பரவுவது தடுக்கப்படும்.

அம்மை பாதித்தவர்களுக்கு வேப்பிலைகளை அரைத்து உடலில் பூசி ஊறிய பின் குளித்தால் அம்மை குணமாகும்; முதல் நாள் இரவு கைப்பிடி அளவு வேப்பிலைகளைத் தண்ணீரில் போட்டு ஊற விட்டு மறு நாள் அத்தண்ணீரில் குளித்தல் நல்லது.

வேப்பிலையை அரைத்து உடலில் பூசி ஊறிய பின் குளித்து வர வேர்க்குரு, பரு, படை போன்ற சருமப் பிரச்சினைகள் நீங்கும்.

வேப்பிலையில் கசாயம் வைத்துக் குடித்தால் சுரம் தணியும்.

வேப்ப மரப்பட்டையைப் பொடி செய்து, பல் துலக்கப் பயன்படுத்தலாம்.

வேப்ப மரத்தின் பட்டை கல்லீரலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது

சந்தனப் பொடியோடு வேப்ப மரப்பட்டையின் பொடியைக் கலந்து, உடன் ரோஸ் வாட்டர் சேர்த்து சருமத்தில் பூசி உலர்ந்த பின் குளித்தால் சருமம் புத்துணர்வோடு இருக்கும்.

அபாரமான சுவை நிறைந்த வேப்பம்பூ ரசம், வயிற்று உபாதைகளைப் போக்கவும் செரிமானத்தைத் தூண்டவும் கூடியது.

உலர்ந்த வேப்பம் பூக்களை அரைத்து பருக்கள் மீது பூசவும். வேப்ப இலைப் பொடியோடு சிறிது வேப்ப எண்ணெய்யைக் கலந்து கரும்புள்ளிகள் மீது பூச, கரும்புள்ளிகள் மறையும்.

வேப்ப விதை எண்ணெய், கரு உருவாவதைத் தவிர்க்க உதவுகிறது என்பது ஆய்வு மூலம் நிரூபணமாகியுள்ளது.

வேப்பங்குச்சியை வைத்துப் பல் துலக்கினால் பல் நோய்கள் தீருவதோடு பற்களும் உறுதியாகும்.

 

Kidhours – Neem Tree Herbal , Neem Tree Herbal update

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.