Friday, July 26, 2024
Homeதிருக்குறள்தினம் ஒரு திருக்குறள்''வகுத்தான் வகுத்த வகையல்லால்.....'' தினம் ஒரு திருக்குறள் கற்போம் Thirukkural 377

”வகுத்தான் வகுத்த வகையல்லால்…..” தினம் ஒரு திருக்குறள் கற்போம் Thirukkural 377

- Advertisement -

Thirukkural 377 தினம் ஒரு திருக்குறள் கற்போம்

- Advertisement -

 

அறத்துப்பால் / ஊழியல் / ஊழ்

 

- Advertisement -

”வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.”

ஊழை வகுத்தவன் வகுத்துவிட்ட வகைப்படி அல்லாமல் கோடியாகப் பொருள் தொகுத்தவர்க்கும் அவற்றைத் துய்த்தல் என்பது அரிதாகும் (௩௱௭௰௭)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் – புதிய உரை)

- Advertisement -

ஊழ் ஏற்ப்படுத்திய வகையால் அல்லாமல் முயன்று கோடிக்கணக்கானப் பொருளைச் சேர்த்தவருக்கும் அவற்றை நுகர முடியாது. (௩௱௭௰௭)
—மு. வரதராசன்

கோடிப்பொருள் சேர்ந்திருந்தாலும் , இறைவன் விதித்த விதிப்படிதான் நாம் அதை அனுபவிக்க முடியுமே தவிர, நம் விருப்பப்படி அனுபவிப்பது கடினம். (௩௱௭௰௭)
—சாலமன் பாப்பையா

Thirukkural 377 தினம் ஒரு திருக்குறள் கற்போம்
Thirukkural 377 தினம் ஒரு திருக்குறள் கற்போம்

வகுத்து முறைப்படுத்திய வாழ்க்கை நெறியை ஒட்டி நடக்கா விட்டால் கோடிப் பொருள் குவித்தாலும், அதன் பயனை அனுபவிப்பது என்பது அரிதேயாகும் (௩௱௭௰௭)
—மு. கருணாநிதி

 

Kidhours – Thirukkural 377

 

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.