Sunday, September 24, 2023
Homeகல்விசுற்றாடல்தமிழும் மேலைத்தேயமும் கட்டுரை#tamil culture#westernization

தமிழும் மேலைத்தேயமும் கட்டுரை#tamil culture#westernization

- Advertisement -

தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவற்கொரு குணமுண்டு’ என்று தமிழரை அடையாளப்படுத்தினார் நாமக்கல் கவிஞர். வேறு எந்த இனத்திற்கும் மொழிக்கும் இல்லாத பெருமை தமிழுக்கும் தமிழருக்கும் உண்டு. காரணம் மனித இனம் எப்படி வாழ வேண்டும் என்பதனை விட எப்படி வாழக் கூடாது என்று வாழ்வியலை கற்றுக் கொடுத்த தமிழரின் பண்பாட்டு அடிச்சுவடுகள் இன்றும் உலகம் முழுவதிலும் தடம் பதித்து இருக்கிறது என்றால் உயர்ந்த சிந்தனைகளையும், உயர்வான எண்ணங்களையும் சமூகம் எனும் மணற்பரப்பில் விதைத்துச் சென்றிருக்கிறது என்று தானே அர்த்தம்.பண்பட்ட மண்ணில்தான் செடிகளும் கொடிகளும் துளிர்விடும். அதுபோல இந்தச் சமூகம் பண்பட வேண்டும் என்றால் நல்ல பண்பாடு இருக்க வேண்டும் என்பதனை தமிழினம் இத்தரணிக்குக் கற்று கொடுத்து இருக்கிறது. நாடாண்ட மன்னன் முதல் குடிசை வாழும் சாதாரண குடிமகன் வரை குலம் காக்கும் பண்பாட்டை கட்டிக் காத்து பார் போற்ற வாழ்ந்த இனம் தமிழினம். இது வரலாற்றுப் பதிவு.இலக்கியங்கள் தொடங்கி இன்றைய இணையம் வரைக்கும் தமிழரின் பண்பாடும் பதிவுகள் தன்னைக் காட்சிப்படுத்தி நிற்கிறது. நாகரீகம் என்ற பெயரில் தலைமுறை கடந்து விட்டாலும் தமிழரின் பண்பாட்டு எச்சங்கள் வாழ்வியலின் ஒவ்வொரு தளத்திலும் பின் தொடர்ந்து வருகிறது.
உலகின் தொன்மையான் மொழிகளில் ஒன்று என பெருமைப்பட்டுக்கொள்ள காரணமான தமிழ் மொழியின் இன்றைய நிலையை பார்த்தால் மிகவும் சோகம்தான்.தமிழின் சிறப்பு தொன்மையில் இல்லை அதன் தொடர்ச்சியில் உள்ளது. என தமிழை காப்பாற்ற வேண்டிய காலமும் கடமையும் இப்பொழுது நம் கையில் உள்ளது. தமிழன் தன் பெருமையை மறந்து ஆங்கிலத்தின் மேல் மோகம் வைத்ததுதான் தமிழின் இந்த நிலமைக்கு அடிப்படை காரணம். பெரும்பாலும் இப்பொழுது நம்மிடம் தமிழ் இல்லை. ஆங்கிலத்தமிழ் தான் நமது நுனி நாக்கில் மிஞ்சியுள்ளது. அதிலும் தமிழை விழுங்கி ஏப்பம் விடும் நிலைதான் எதிர் வரும் காலத்தில் நிகழும் போல,தமிழரிடம் தமிழில் சேசுங்கள் என பிரச்சாரம் செய்ய வேண்டிய அழிவு நிலைக்கு வந்து விட்ட நம்து செந்தமிழ் மொழி நம் தலைமுறையுடன் முடிந்துவிடுமோவென அச்சம் நெஞ்சினுள் ஊற்றெடுக்கிறது.

- Advertisement -
tamil_kids_news
www.kidhours.com

கவிஞன் ஒருவன் அருமையாக சொன்னான், பசுமாடும் தாயை அம்மாவென சொல்கிறது, பச்சைத்தமிழனோ மம்மினு சொல்கிறான் என்று. இந்த வார்த்தைகள் அவனது வாயில் வர அவனது எண்ணக்குமுறல்கள் எப்படி இருக்குமென யோசிக்க முடிகிறது. சிறு குழந்தை பள்ளிக்கு போகும்முன் பெற்றோர் சொல்லிக்கொடுக்கும் முதல் வார்த்தைகள் கூட தாய்த்தமிழ் மொழியில் இருப்பதில்லை. நம்மை அடிமையாக்கியவர்கள் மொழிதான் இன்று தமிழனுக்கு உயர்வாக தெரிகிறது.ஒருவனின் ஆங்கிலப்புலமையே அவனது அறிவுத்திறமையாக கணக்கிடப்படுகிறது. சிந்தியுங்கள், இப்பொழுது நம்மை சுற்றியிருக்கும் பொருட்கள் பலவற்றின் தமிழ் பெயர்கள் நம் இதுவரை நாம் அறிந்திடாதவையாக இருக்கிறது. மனதின் சிந்தனைகள் கூட சுத்தத் தமிழில் இருப்பதில்லை.சரி விடுங்கள், மொழிதான் இப்படி, கலாச்சாரம் எப்படியென பார்த்தால் அதுவும் மிகவும் சோகம்தான். அந்தி மயங்கும் மாலையில் சாலையோரம் வறுத்துக் கொடுக்கும் சோற்று உருண்டைகளை பெயர் தெரியாமல் சுவைக்கும் கலாச்சாரத்தை காலம் ஏற்படுத்தியுள்ளது.

www.kidhours.com
www.kidhours.com

சினிமா என்னும் ஊடகம் முன்பெல்லாம் நாடகத்தமில் வடிவில் தமிழ் கலாச்சாரத்தை வளர்க்க மட்டுமே உதவியது. இப்பொழுது நிலைமையே தலைகீழ். நுனி நாக்கில் ஆங்கிலமும் சாயம் பூசப்பட்ட தலைமுடியும் ஐந்து நிமிடத்தில் நூறு பேரை சாகடிக்கும் ஒருவந்தான் நாயகனாம்.எல்லாம் சரிதான் நூறு பேரை சாகடித்துவிட்டு அடுத்து என்ன செய்வான் என்றால் விசித்திரம்தான். அரை நிர்வாண உடையில் நாயகியும் முழுதாக போர்த்திய உடையில் நாயகனும் இமயமலையின் உறைய வைக்கும் பனி மலைச்சாரலில் இடி இசையில் நடனம்.தற்ப்போதுள்ள தமிழ் கலாச்சாரத்தில் பெண்கள் ஒரு கேலிப்பொருள்களாகவே சித்தரிக்கப்படுகின்றனர். இதனை தமிழ் சினிமா இன்றும் ஆதாரப்பூர்வமாக நிருபித்துக்கொண்டுதானிருக்கிறது.

- Advertisement -

அவலங்கள் இத்துடன் முடியவில்லை. தமிழின் பண்டைய வரலாற்றையும் சண்டைக்கு இழுக்கிறது. இதற்க்கு தற்போது சிறந்த எடுத்துக்காட்டு ஒன்று இருக்கிறது. மிகப்பெரும் கூட்டணியில் பிரம்மாண்ட செலவில் தமிழில் வெளிவந்த சிவாஜி என்னும் படத்தில் ‘ தமிழ் வேந்தன் கொடை வள்ளல் பாரி மன்னனின் புதல்விகள் அங்கவை, சங்கவை என்பவர்களை கதாப்பாத்திரங்களின் பெயர்களாக வைத்து அவர்களின் தந்தையாக ஒரு நாடறிந்த தமிழ் பேராசிரியரை நடிக்க வைத்து அவரது வாயிலாகவே இரட்டை அர்த்த வசனங்களை பேசி தமிழையும் தமிழ் கலாச்சாரத்தையும் கொலை செய்ய துணிந்திருக்கிறார்கள்.

- Advertisement -
tamil_kids_news
www.kidhours.com

ஜாதி, மதம், இனம், நிறம், மொழி, நாடு என பல்வேறு பிரிவினைகள் சொல்லி நமக்குள் வேற்றுமையை ஏற்படுத்தி ஒற்றுமையான வாழ்க்கைக்கு உலைவைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் பல நுாற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழன் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று ஒற்றுமை வாழ்க்கைக்கு தன் பண்பாட்டு அடிச்சுவட்டை பதிவு செய்து சென்றிருக்கிறான். எல்லா நாடும் நம் நாடே, எல்லா ஊரும் நம் ஊரே. எல்லோரும் நம் உறவுகளே இதில் வேற்றுமை வேண்டாம் எனச் சொன்ன இனம் தமிழினம்.இப்பண்பாட்டுக் கோட்பாட்டை பின்பற்றி வந்தால் நமக்குள் சண்டைகளும், வழக்குகளும் நம்மை அண்டாது. சரித்திரம் போற்ற வாழும் வாழ்க்கை நம் வசமாகும். இது போன்ற ஒரு பண்பாட்டுச் சிந்தனையை இது நாள் வரைக்கும் வேறு எந்த இனமும், மொழியும் பதிவு செய்யவில்லை. காலங்கள் ஓடிவிட்டது. தலைமுறை கடந்து விட்டது.அறிவியலின் வளர்ச்சி அபரிதமாக வளர்ந்துவிட்டது. ஆனாலும் தமிழரின் பாண்பாட்டு எச்சங்கள் வாழ்வியலின் ஒவ்வொரு தளத்திலும் தன்னை புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது.உண்ணும் உணவு முதல் உடுத்தும் உடை வரைக்கும் பண்பாடு போற்றப்படுகிறது. பிறப்பு முதல் இறப்பு வரைக்கும் வாழ்வியலின் ஒவ்வொரு நகர்விலும் பண்பாடு கடைபிடிக்கப்படுகிறது. உறவுகள் தொடங்கி இறை வழிபாடு வரைக்கும் பண்பாடு பறைசாற்றப்படுகிறது. இல்லறம் முதல் துறவறம் வரை பண்பாட்டு வாழ்வியல் பகிரப்படுகிறது. இப்படியாக ஊருக்கும் உலகத்திற்கும் உன்னதக் கருத்துகளையும், உயர்வான எண்ணங்களையும் தனிமனித ஒழுக்கத்தையும் பண்பாடு என்ற பெயரில் அள்ளிக் கொடுத்த தமிழரின் தலை சிறந்த நாகரீக வாழ்வியலை உலகம் உச்சி நுகர்ந்து போற்றுகிறது. வழியில் வந்து செல்லும் வழிப் போக்கர்கள் கூட அமர்ந்து செல்ல திண்ணை அமைத்து வீடுகட்டிய தமிழரின் பண்பாட்டு கோட்பாட்டை யாரும் புறந்தள்ளி விட முடியாது.இன்னும் எத்தனை காலங்கள் ஆனாலும் தமிழர் பண்பாடு தலை சிறந்து நிற்கும். தரணி போற்றும் தமிழரின் பண்பாட்டை இந்நாளில் நாமும் போற்றுவோம்.

 

*********************************

kidhours-upcoming

covid19_update #kids songs,#kids health,#siruvar neram,kids songs,siruvar seithigal,siruvar vilaiyattu,siruvar kalvi, world tamil news,tamil first news,tamils,raasi palan,tamil cinema,new tamil movies,vijay sethupathi movies,latest tamil movies,action tamil movie,new tamil movies 2020,new tamil movies released,tamil new film,film tamil,online movies tamil,tamil,english to tamil,english to tamil translation,tamil translation,english to tamil dictionary,tamil typing,hindi to tamil,english to tamil typing
english to tamil sentence translation online,google tamil typing,tamil dictionary,hindi to,tamil translation,tamil to english translator app,sinhala to tamil,tamil to english translation sentences,jothidam,tamil jathagam,tamil jathagam online,daily thanthi jothidam
nadi jothidam,josiyam in tamil,tamil jathagam online free,tamil jothidam online
online josiyam tamil,kulanthai pirappu jothidam in tamil#Insurance #Gas#Electricity#Loans#Mortgage#Attorney#Lawyer#Donate#Conference Call
Degree#Credit

 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.