உங்கள் வீட்டில் வயதானவர்கள் இருக்கிறார்கள் என்றால் குழந்தைகளைப் போலவே அவர்களையும் கூடுதல் கவனம் செலுத்தி பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும். மார்புச் சளி, இருதய நோய், நரம்புத் தளர்ச்சி, ஆகியவை முதியவர்களை அச்சுறுத்தும் நோய்களாக இருக்கின்றன. மேலும், குளிர்காலத்தில் குறைந்த வெப்பநிலையால் உடலின் வெப்பநிலை 95 பாரன்ஹீட்டுக்கு (fahrenheit) கீழாக குறையும். இவை, சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். குறிப்பாக, வயதானவர்களுக்கு உடல் வெப்பநிலை விரைவாக குறையும் என்பதால் கூடுதல் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது.
வீட்டை சூடாக வைத்திருங்கள்.

katturaigal
kidhours

வீட்டில் இருக்கும் வயதானவர்கள் நம்மைக்காட்டிலும் குளிரை அதிகமாக உணருவார்கள். இதனால் அவர்களுக்கு தேவையான பொருட்களை எப்போதும் வைத்திருக்க வேண்டும். வீட்டில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்க வேண்டாம். குறிப்பாக, இரவு நேரங்களில். வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களை மூடி வைத்து, அவற்றில் பல அடுக்கு ஆடைகள் (Screen covers) இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் ரூம் ஹீட்டரையும் ( Room Heater) பயன்படுத்தலாம். குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு ஹீட்டரை ஆப் செய்து விடுங்கள். மேலும், ஹீட்டரில் இருந்து வாயு ஏதேனும் லீக்காகிறதா என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
உடல் ரீதியாக சுறுசுறுப்பாக வைத்திருங்கள் : குளிர்காலத்தில், கடும் குளிரில் இருந்து தப்பிக்க ஸ்வெட்டர் மற்றும் கம்பளி ஆகியவற்றை கொடுத்து முதியவர்களை பார்த்துக் கொண்டாலும், உடல்ரீதியாக அவர்கள் சுறுசுறுப்பாக இருப்பதும் முக்கியம். இதனால் விறைப்பு, சோம்பல் ஆகியவற்றைப் போக்கி உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். தேவைக்கு அதிகமாக உணவுகளை எடுத்துக்கொண்டாலும் வயதானவர்களுக்கு அது ஒருவித களைப்பை ஏற்படுத்தும் என்பதால் செரிமானத்துக்கு ஏற்ற உணவுகளை கொடுங்கள்.

மிதமான சூடு தண்ணீர் :

வயதான பெற்றோர் மட்டுமல்ல, குழந்தைகள் உள்ளிட்ட அனைவரும் மிதமான சூட்டில் இருக்கும் தண்ணீரை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். அதிகமான சூடு இருக்கும் தண்ணீர் உடல் வெப்பநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும். மேலும், வறண்ட சருமம் ஏற்படும். அதேபோல், குளிராக இருக்கும் தண்ணீரையும் பயன்படுத்த வேண்டாம், ஏற்கனவே இருக்கும் குளிரில் உடலில் இருக்கும் வெப்பநிலை குறைந்து கொண்டு இருக்கும். அப்போது குளிர்ந்த நீரில் குளிக்கும்போது, மேலும் வெப்பநிலை குறைந்து தேவையற்ற உடல் உபாதைகளை ஏற்படுத்தும். இதனால், தண்ணீரிலும் கவனமாக இருக்க வேண்டும்.

katturaigal
kidhours

சூடான நீரைப் பயன்படுத்துவது உடல் வெப்பநிலையில் திடீர் மாற்றங்களைச் செய்யலாம், இது மிகவும் வறண்ட சருமத்திற்கும் வழிவகுக்கும், இதனால் குளிக்கும் போது மிதமான சூடு இருக்கும் தண்ணீரைப் பயன்படுத்துவதை உறுதி செய்யுங்கள்.கார்பன் மோனாக்சைடுகளிலிருந்து பாதுகாக்கவும் : காற்றோட்டமான பகுதியில் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். மூடிய அறைக்குள் இருக்கும்போது அங்கு இருக்கும் மோசமான காற்று கார்பன் மோனாக்சைடு (carbon monoxide) அளவை அதிகரிக்கும். இது உடல்நலத்துக்கு தீங்கானது என்பதால் விசாலமான அறைகளில் நேரத்தை செலவிடுங்கள். ஹீட்டரையும் (Heater) தேவைக்கு அதிகமாக பயன்படுத்த வேண்டாம். வயதான பெற்றோருக்கு நாள்தோறும் காலை, மாலை இருவேளைகளிலும் மூச்சுப்பயிற்சியை சொல்லிக்கொடுங்கள். சுவாசம் நன்றாக இருந்தால், உடலில் வெப்பம் அதிகரிக்காது.

sukatharam
kidhours

குடிக்கும் தண்ணீர் :

குளிர்காத்தில் அதிகம் தாகம் எடுக்காது. அப்போது, தேவையான தண்ணீரை குடிக்காவிட்டால் அல்லது மிகக் குறைந்த தண்ணீரை மட்டும் எடுத்துக்கொண்டால் உடல் நீரிழப்புக்குள்ளாகும். உடலில் ஏற்பட்டுள்ள நீரிழப்பு மலச்சிக்கல் மற்றும் வறட்சி போன்ற சிக்கல்களை ஏற்படுத்தும். அதனால், தேவையான அளவு குடிநீர் எடுத்துக்கொள்வதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். வீட்டில் நிலவும் வெப்பநிலையைப் பொறுத்து சூடான அல்லது மிதமான சூட்டில் குடிநீரை வயதான பெற்றோருக்கு கொடுக்கலாம்.டிஜிட்டல் யுகத்தில் செல்போன்களின் மீதான போதை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. சொல்லப்போனால், செல்போனுக்கு அடிமையாக இருக்கிறோம் என்பது கூட பலருக்கும் தெரிவதில்லை. நொடிக்கு ஒருமுறை நம்மை அறியாமலேயே செல்போன்களை நம் கண் பார்த்துவிடுகிறது. செல்போன்களுக்கு அடிமையாக இருப்பதும் ஒருவகையான போதை பழக்கம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.