1.சிச்சென் இட்ஷா(கிபி 800 -க்கு முந்தையது)-Chichen Itza

ulaka athisayam_world_wonder
siruvar_neram

யுகாட்டன் தீபகற்பம், மெக்சிகோ
சிச்சென் இட்ஷா என்பது, பண்டைய மாயன் நாகரீகத்தில் அரசியல் மற்றும் பொருளாதார மையமாக விளங்கிய புகழ் மிக்க கோவில் நகரமாகும். குக்குல்கானுடைய பிரமிட், சாக் மூல் கோவில், ஆயிரம் தூண் மகால், கைதிகள் விளையாட்டு மைதானம் போன்ற பல்வேறு அமைப்புகள், கட்டிடக் கலைக்கும் வடிவமைப்புக்கும் அவர்கள் காட்டிய அதீத ஈடுபாட்டை வெளிக்காட்டும் வகையில் இன்றும் காண முடிகிறது. இந்த கடைசி பிரமிட், மாயன் நாகரீக கோவில்களில் மிகப் பெருமை வாய்ந்தது.

2.கிறிஸ்து மீட்பர்(1931), ரியோ-டி-ஜெனிரோ, பிரேசில்-Christ Redeemer

ulaka athisayam_world_wonder
siruvar_neram

ரியோ-டி-ஜெனிரோ நகரை பார்க்கும் வகையில் அமைந்த கார்கோவடோ மலை மீது, 38 மீட்டர் உயரத்தில் கிறிஸ்துவின் இந்த சிலை உள்ளது. பிரேசில் நாட்டின் ஹைட்டர் டா சில்வா கோஸ்டா (Heitor da Silva Costa) என்பவரால் வடிவமைக்கப்பட்டு, பால் லாண்டோவ்ஸ்கி (Paul Landowski) என்ற பிரஞ்சு சிற்பியால் உருவாக்கப்பட்ட இச்சிலை, உலகெங்கும் நன்கு அறியப்பட்ட நினவுச்சின்னமாகும். உருவாக்க ஐந்து ஆண்டுகள் ஆன இச்சிலை, 12, அக்டோபர் 1931 அன்று திறந்து வைக்கப்பட்டது. வந்தாரை வரவேற்கும் பிரேசில் மக்களின் விருந்தோம்பலுக்கும், ரியோ-டி-ஜெனிரோ நகருக்கும் அடையாளச் சின்னமாக இச்சிலை விளங்குகிறது.

3.ரோமக் கேளிக்கைக் கூடம்(கிபி 70-82), ரோம் நகரம், இத்தாலி-Tema Morsmal

ulaka athisayam_world_wonder
siruvar_neram

வெற்றி பெற்ற படையணியினர் மற்றும் ரோம சாம்ராஜ்ஜியத்தை பெருமைப்படுத்தும் விதமாக, ரோம் நகர மையத்தில் இந்த பிரசித்தி பெற்ற நடுவட்டரங்கம் நிர்மாணிக்கப்பட்டது. இதன் வடிவமைப்பு, காலத்தை கடந்து, 2000 ஆண்டுகளுக்கு பின்பும் வடிவமைக்கப்படும் நவீன விளையாட்டரங்க வடிவமைப்புக்கு அடிப்படையாக, அதனைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது. பார்வையாளர்களை மகிழ்விப்பதற்காக, இங்கு நடைபெற்ற மிகக் கொடுமையான பல சண்டைகள் மற்றும் விளையாட்டுக்களைப் பற்றி இன்று நாம் புத்தகங்கள், படங்கள் மூலம் அறிகிறோம்.

4.தாஜ்மகால்(கிபி 1630)-Tajmahal

ulaka athisayam_world_wonder
siruvar_neram

மறைந்த காதல் மனைவியின் நினைவை போற்றும் வகையில், முகலாயப் பேரரசின் ஐந்தாம் பேரரசர் ஷாஜகான் உத்தரவுப்படி, இந்த பிரமாண்டமான மசூதி கட்டப்பட்டது. இந்தியாவின் முகலாய கட்டிடக்கலையின் மகுடமாக விளங்கும் தாஜ்மகால், நன்கு வடிவமைக்கப்பட்ட தோட்டத்தின் மத்தியில், வெள்ளை சலவைக்கற்களை கொண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இறுதியில் கைது செய்யபட்டு சிறையிடப்பட்ட பேரரசர், தன்னுடைய சிறிய சிறைக்கூடத்தின் ஜன்னல் வழியாக மட்டுமே தாஜ்மகாலைக் காண முடிந்ததாக கூறப்படுகிறது.

5.சீனப் பெருஞ்சுவர்(கிமு 230 மற்றும் கிபி 1368-1644), சீனா-Great Wall

ulaka athisayam_world_wonder
siruvar_neram

ஏற்கனவே இருந்த கோட்டை அமைப்பை வலுப்படுத்தவும், அடிக்கடி தொடர்ந்த மங்கோலிய படையெடுப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும் சீனப் பெருங்சுவர் நிர்மாணிக்கப்பட்டது. மனிதனால் கட்டப்பட்ட அமைப்புகளிலேயே மிகப்பெரிய இச்சுவர், விண்வெளியிலிருந்து காணக்கூடிய ஒரே அமைப்பு என்றும் கூறப்படுகிறது.. இந்த சாதனைச் சுவரை நிர்மாணிப்பதில், பலர் தங்களுடைய உயிரையும் தந்திருக்க வாய்ப்புகள் உள்ளன.

6.மச்சு பிச்சு(கிபி 1460-1470), பெரு-Machu Picchu 

ulaka athisayam_world_wonder
siruvar_neram

மச்சு பிச்சு (பழைய மலை) என்று அழைக்கப்பட்ட மேகம் தவழும் மலை மீது, பேரரசர் பச்சகுட்டிக் (Emperor Pachacútec) என்பவர் பதினைந்தாம் நூற்றாண்டில் ஒரு நகரை நிர்மாணித்தார். இந்த நகரம் ஆண்டஸ் பீடபூமிக்கு மேலே பாதி வழியில், அமேசான் காடுகளுக்கு மத்தியில், உருபம்பா நதிக்கு மேல் உள்ளது. சின்னம்மை நோய் தொற்றால் இன்கா மக்களால் இந்நகரம் காலி செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஸ்பானியரால் இன்கா பேரரசு தோற்கடிக்கப்பட்ட பிறகு, ஏறத்தாழ மூன்று நூற்றாண்டுகளாக இந்நகரம் காணாமல் போனதாக கருதப்பட்டது. 1911-ல் ஹிரம் பிங்கம் (Hiram Bingham) என்பவரால் இது மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது.

7.பெட்ரா(கிமு 9- கிபி 40), ஜோர்டான்-Petra

ulaka athisayam_world_wonder
siruvar_neramஅரேபியன் பாலைவனத்தின் ஓரத்தில், நார்பாட்டியன் சாம்ராஜ்ஜியத்தின் (Nabataean empire) அரசர் நான்காம் அரிட்டாஸ் -ன் (King Aretas IV கிமு 9 முதல் கிபி 40 வரை) தலைநகராக பெட்ரா நகர் விளங்கியது. நீர் நிர்வாகத்தில் நிபுணர்களாக விளங்கிய நார்பாட்டியர்கள், தங்கள் நகரில் நீர் வழித்தடங்களையும், சேமிப்புக்களையும் நிர்மாணித்திருந்தார்கள். கிரீக்-ரோமன் மாதிரிகள் அடிப்படையில் அமைந்த அரங்கம், 4000 பார்வையாளர்கள் அமரக் கூடியதாக இருந்தது. எல்-டீர் மடத்தில் (El-Deir Monastery) அமைந்துள்ள பெட்ரா அரண்மனையின் கல்லறைகள், 42 மீட்டர் உயரமுள்ள ஹெலினியக் கோவிலின் முன்புறம் (Hellenistic temple facade) ஆகியவை மத்தியக் கிழக்கு நாகரீகத்தின் அடையாளமாக இன்றும் காணக் கிடைக்கின்றன.

 

 

*********************************

kidhours-upcoming

covid19_update #kids songs,#kids health,#siruvar neram,kids songs,siruvar seithigal,siruvar vilaiyattu,siruvar kalvi, world tamil news,tamil first news,tamils,raasi palan,tamil cinema,new tamil movies,vijay sethupathi movies,latest tamil movies,action tamil movie,new tamil movies 2020,new tamil movies released,tamil new film,film tamil,online movies tamil,tamil,english to tamil,english to tamil translation,tamil translation,english to tamil dictionary,tamil typing,hindi to tamil,english to tamil typing
english to tamil sentence translation online,google tamil typing,tamil dictionary,hindi to,tamil translation,tamil to english translator app,sinhala to tamil,tamil to english translation sentences,jothidam,tamil jathagam,tamil jathagam online,daily thanthi jothidam
nadi jothidam,josiyam in tamil,tamil jathagam online free,tamil jothidam online
online josiyam tamil,kulanthai pirappu jothidam in tamil#Insurance #Gas#Electricity#Loans#Mortgage#Attorney#Lawyer#Donate#Conference Call
Degree#Credit