Warning Virus Noro சிறுவர்களுக்கான உலக செய்திகள்
நோரோ வைரஸ் என்னும் வைரஸ் தொற்று கனடாவில் வேகமாக பரவி வருவதாக கனடிய பொதுச் சுகாதார அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது
கனடிய பொதுச் சுகாதார அலுவலகம் இது குறித்து அறிவித்துள்ளது.
குறித்த தொற்று வயிற்றுவலி, வாந்தி, தசைபிடிப்பு மற்றும் வயிற்றோட்டம் உள்ளிட்ட நோய்த் தாக்கங்கள் ஏற்படக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளை விடவும் இந்த ஆண்டில் குறித்த தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளது
குறிப்பாக ஒன்றாரியோ மற்றும் அல்பேர்ட்டா மாகாணங்களில் கூடுதல் எண்ணிக்கையில் நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வைரஸ் தாக்கமானது கனடாவை தாண்டி அமெரிக்காவின் ஒஹியோவின் நோர்வால்க் பகுதியில் பரவிய காரணத்தினால் நோரா வைரஸ் என பெயரிடப்பட்டுள்ளது.
இவற்றிக்கான விசேட சிகிச்சை முறைமைகள் எதுவும் கிடையாது எனவும் னடிய பொதுச் சுகாதார அலுவலகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Kidhours – Warning Virus Noro
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.