Saturday, May 18, 2024
Homeபொழுது போக்குமதிநுட்பங்கள்கொரோனா நோயாளி பக்கத்தில் வந்தால் எச்சரிக்கும் கருவி!.. இந்திய மாணவர்களின் அசத்தலான கண்டுபிடிப்பு

கொரோனா நோயாளி பக்கத்தில் வந்தால் எச்சரிக்கும் கருவி!.. இந்திய மாணவர்களின் அசத்தலான கண்டுபிடிப்பு

- Advertisement -

கொரோனா வைரஸ் உலகமெங்கும் மீண்டும் பரவி வரும் நேரத்தில், தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

- Advertisement -

இதனால், கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை அரசு அறிவித்தது. மேலும் கொரோனா வைரஸ் பரவுவதற்கு முக்கிய காரணமே மக்களின் அலட்சியமும், சமூக இடைவேளி பின்பற்றததும், முககவசம் அணியாமல் சுற்றுவதும் என பல காரணங்கள் உள்ளன.

இந்த நிலையில், பிஹாரை சேர்ந்த பள்ளி மாணவர்கள், கொரோனா எச்சரிக்கை கருவியை கண்டுபிடித்து புதிய சாதனை படைத்துள்ளனர்.

- Advertisement -

பிஹார் தலைநகர் பாட்னாவில் உள்ள பால பவன் கில்காரியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர் அர்பித் குமார்.

- Advertisement -

இவரது, தம்பி அபிஜித் குமார். இவர் 10-ம்வகுப்பு படிக்கிறார். சிறுவயது முதலே இருவரும் அறிவியல் ஆராய்ச்சிகளில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஏற்கனவே, தரமான குடிநீர் சுத்திகரிப்பு இயந்திர கண்டுபிடிப்புக்காக கடந்த ஆண்டு இருவருக்கும் பிரதீபா புரஸ்கார் விருதினை குடியரசுத் தலைவர் வழங்கி இருந்தார்.

தற்போது இந்த கொரோனா எச்சரிக்கை கருவியை கண்டுப்பிடுத்துள்ளது பாராட்டு கூறியதாக அமைந்துள்ளது,.

இதைப்பற்றி அவர்கள் தெரிவித்ததாவது, கொரோனா வைரஸ் ஊரடங்கில் இருந்து தடுப்பதற்காக தீவிர ஆராய்ச்சியில் ஈடுப்பட்டோம்.

4 மாதம் முயற்ச்சி பின் கொரோனா எச்சரிக்கை கருவியை வடிவமைத்தோம்.

இந்த கருவியானது, கருவி சட்டையில் அணிந்து கொள்ளும் வகையில் சிறிய பதக்கம் (பேட்ஜ்) வடிவில் இருக்கும்.

மேலும், உடல் வெப்பநிலை அதிகமுள்ள நபர் ஒரு மீட்டர் தொலைவில் வரும்போது எங்களது கருவி ‘பீப்’ஒலி எழுப்பி எச்சரிக்கை செய்யும்.

கொரோனா நோயாளி பக்கத்தில் வந்தால் எச்சரிக்கும் கருவி
கொரோனா நோயாளி பக்கத்தில் வந்தால் எச்சரிக்கும் கருவி

அந்த நபர் மிக அருகில் வரும்போது கருவி தொடர்ச்சியாக அதிர்வுகளை ஏற்படுத்தி எச்சரிக்கை செய்யும்.

இதனால், உடல் வெப்பம் அதிகம் உள்ள நபர்களிடம் இருந்துஎளிதாக விலகி செல்ல முடியும்.

எங்களது கருவிக்கு காப்புரிமை கோரி கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய அரசிடம் விண்ணப்பித்தோம்.

மேலும், பல்வேறு கட்ட பரிசீலனைகளுக்குப் பிறகு கடந்த மார்ச் 26-ம் தேதி எங்கள் கருவிக்கு காப்புரிமை வழங்கப்பட்டது.

புதிய கருவியை வணிகரீதியாக தயாரிக்க பல்வேறு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என தெரிவித்துள்ளனர். இவர்களின் செயலுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.