Saturday, July 27, 2024
Homeசுகாதாரம்நெல்லிக்காய் எண்ணெய் தயாரிக்கும் முறை Tamil Kids Healthily

நெல்லிக்காய் எண்ணெய் தயாரிக்கும் முறை Tamil Kids Healthily

- Advertisement -

Tamil Kids Healthily சிறுவர் சுகாதாரம்

- Advertisement -

நெல்லிக்காய் எண்ணெய் மயிர்க்கால்களின் வேர்களை பலப்படுத்துகிறது. இது கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகிறது. பொடுகுத் தொல்லையை போக்கவும்,நரை முடியை தடுத்து கூந்தல் கருமையாக வளரவும் உதவுகிறது.

உச்சந்தலை சருமத் திற்கு ஈரப்பதத்தை அளிக்க உதவுகிறது. இவை தவிர தலைவலி, சோர்வு மற்றும் பித்தம் சம்பந்தமான அறிகுறிகளை போக்கவும் உதவுகிறது. நெல்லிக்காயில் நிறைந்துள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள், பைட்டோ கெமிக்கல்கள் கூந்தல் மற்றும் சரும ஆரோக்கியத்தில் மிக முக்கி யமான பங்கு வகிக்கிறது. இந்த எண்ணெயை வீட்டில் எப்படி தயாரிப்பது என்பதை பார்க்கலாம்.

- Advertisement -

1.நெல்லிக்காய் பவுடர் – 350 கிராம் (இது நாட்டு மருந்துகடைகளில் கிடைக்கும்)

- Advertisement -

2.தண்ணீர் – 4 லிட்டர்

3.தேங்காயெண்ணெய் – 500 மி. லி

நெல்லிக்காய் கஷாயம் தயாரிக்க 250 கிராம் நெல்லிக்காய் பவுடரை 4 லிட்டர் தண்ணீரில் கலந்து கொள்ளுங்கள். அந்த நீரை கொதிக்க வைத்து 1 லிட்டராக வற்றும் வரை சூடுபடுத்த வேண்டும். நல்ல வாய் அகன்ற பாத்திரத்தில் மிதமான தீயில் வைத்து தொடர்ந்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். தண்ணீர் ஒரு லிட்டராக வற்றிய பிறகு அதை வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

இப்பொழுது ஒரு சிறிய பெளலில் எஞ்சியிருக்கும் 100 கிராம் நெல்லிக்காய் பொடியை எடுத்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து பேஸ்ட்டாக்கி கொள்ளுங்கள். இப்பொழுது இந்த பேஸ்ட், 500 மி. லி தேங்காயெண்ணெய் இவற்றை நெல்லிக்காய் கஷாயத்துடன் சேர்க்க வேண்டும்.

 

Tamil Kids Healthily
Tamil Kids Healthily

 

இப்பொழுது இந்த கலவையை மிதமான தீயில் வைத்து தண்ணீர் முழுவதுமாக வற்றும் வரை கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.

பொதுவாக ஆயுர்வேதிக் எண்ணெய்களை தயாரிக்கும் போது நல்லெண் ணெயை பயன்படுத்துவது உண்டு. ஆனால் கூந்தல் ஆரோக்கியத்திற்கு என்று வரும் போது தேங்காயெண்ணெய் மிகவும் சிறந்தது. இது கூந்தலுக்கு உள்ளி ருந்து போஷாக்கு அளிக்கிறது. ஜலதோஷம், சுவாச பிரச்சனைகள் போன்ற வற்றை சரியாக்க தேங்காயெண்ணெய் உதவுகிறது.

முதலில் பார்ப்பதற்கு நெல்லிக்காய் எண்ணெய் கசடாக இருக்கும். பிறகு அதிலுள்ள தண்ணீர் மட்டும் நீராவியாக ஆரம்பிக்கும். தண்ணீர் முழுவதும் வற்றிய பிறகு எண்ணெய் மட்டும் தனியாக பிரியும். முதலில் எண்ணெயை கொதிக்க வைக்கும் போது காற்று குமிழ்கள் வருவது உண்டு. இறுதியாக தண்ணீர் முழுமையாக வற்றிய பிறகு ஒருவித நுரைத்தல் ஏற்பட்டால் சூடுபடுத்துவதை நிறுத்தி விடுங்கள். இப்பொழுது உங்கள் கூந்தலுக்கு தேவையான நெல்லிக்காய் எண்ணெய் ரெடி.

இந்த முறையில் தயாரிக்கும் நெல்லிக்காய் கஷாயத்தில் நீரில் கரையக்கூடிய பைட்டோ நியூட்ரியன்ட்கள் உள்ளது. பிறகு நெல்லிக்காய் பொடி, தேங்காயெண் ணெயை கஷாயத்துடன் சேர்த்து காய்ச்சும் போது நெல்லிக்காயில் உள்ள பைட்டோ நியூட்ரியன்ட்கள் எண்ணெயில் சேருகின்றன.

குறிப்பு :இந்த நெல்லிக்காய் எண்ணெய் 1-1.5 வருடம் வரை கெடாமல் அப்படியே இருக்கும். இதை ஒரு காற்று புகாத பாட்டிலில் அடைத்து அவ்வபோது சிறிய பாட்டிலில் அடைத்து தேவையானதை பயன்படுத்தி வரலாம்.

பயன்கள்

பிளவுபட்ட முடியின் நுனிகள் மற்றும் வறண்ட கூந்தல் பிரச்சினைகளை போக்குகிறது. ஆண் மற்றும் பெண் இருபாலரின் கூந்தல் வளர்ச்சிக்கும் உதவுகிறது.

பொடுகுத் தொல்லையை போக்க உதவுகிறது.கூந்தலுக்கு ஈரப்பதத்தை அளிக்க உதவுகிறது. கூந்தல் வறண்டு போகாமல் பாதுகாக்கிறது. முன்கூட்டிய இளநரை பிரச்சனையை தடுக்க உதவுகிறது. கூந்தல் வளர்ச்சியை உறுதி செய்கிறது.மயிர்க்கால்களை வலுவாக்குவதால் முடி உதிர்வுகள் தடுக்கப்பட்டு முடி வளர்ச்சி ஊக்குவிக்கப்படுகிறது. கூந்தல் அடர்ந்து கருகருவென்று நீண்டு அடர்த்தியாக வளர்கிறது.

இதை தேங்காயெண்ணெய்க்கு மாற்றாக தினமும் பயன்படுத்தலாம். அல்லது தலைக்குளியல் போது இந்த எண்ணெயை கொண்டு மென்மையாக கூந்தல் முழுவதும் மசாஜ் செய்தும் பயன்படுத்தலாம். இது கூந்தல் வளர்ச்சியோடு தலைவலி மற்றும் சோர்வை போக்க உதவுகிறது.

 

kidhours – Tamil Kids Healthily , Tamil Kids Healthily updates , Tamil Kids Healthily oil

preparetion

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

புவியியல்

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.