Saturday, July 27, 2024
Homeதிருக்குறள்தினம் ஒரு திருக்குறள்"அவிசொரிந் தாயிரம் வேட்டலின்....."தினம் ஒரு திருக்குறள் கற்போம் Thirukkural 259

“அவிசொரிந் தாயிரம் வேட்டலின்…..”தினம் ஒரு திருக்குறள் கற்போம் Thirukkural 259

- Advertisement -

Thirukkural 259 தினம் ஒரு திருக்குறள் கற்போம்

- Advertisement -

அறத்துப்பால் / துறவறவியல் / புலால் மறுத்தல்

“அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று.”

அவியைச் சொரிந்து ஆயிரம் வேள்விகளைச் செய்தலைக் காட்டிலும், ஒன்றன் உயிரைக் கொன்று, அதன் உடலைத் தின்னாமலிருத்தல் மிகவும் நன்மையானதாகும்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் – புதிய உரை)

நெய் முதலியப் பொருள்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலை விட ஒன்றன் உயிரைக்கொன்று உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது.
—மு. வரதராசன்

- Advertisement -

(மந்திரம் சொல்லித் தேவர்களுக்கு இடும் உணவாகிய) அவிகளைத் தீயில் போட்டு ஆயிரம் வேள்வி செய்வதைக் காட்டிலும் ஓர் உயிரைப் போக்கி அதன் உடம்பை உண்ணாமல் இருப்பது நல்லது.
—சாலமன் பாப்பையா

- Advertisement -
Thirukkural 259 தினம் ஒரு திருக்குறள் கற்போம்
Thirukkural 259 தினம் ஒரு திருக்குறள் கற்போம்

நெய் போன்ற பொருள்களைத் தீயிலிட்டு ஆயிரம் வேள்விகளை நடத்துவதைவிட உண்பதற்காக ஓர் உயிரைப் போக்காமலிருப்பது நல்லது
—மு. கருணாநிதி

 

Kidhours -Thirukkural 259 ,Kids thirukkural,easy thirukkural

 

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.