Saturday, July 27, 2024
Homeசிந்தனைகள்இன்று உலக தந்தையர் தினம் - ஜூன் 20 World Father's Day

இன்று உலக தந்தையர் தினம் – ஜூன் 20 World Father’s Day

- Advertisement -

World Father’s Day இன்று உலக தந்தையர் தினம்

- Advertisement -

வாஷிங்டனைச் சேர்ந்த சோனோரா ஸ்மார்ட் டோட் என்பவர் 1909 ஆம் ஆண்டில் விடுமுறை நாளான ஒரு ஞாயிற்றுக் கிழமையில் ஸ்போக்கனில் உள்ள சென்ட்ரல் மெத்தோடிஸ்ட் எபிஸ்கோபால் தேவாலயத்தில் அன்னையர் தினம் சமய போதனையைக் கேட்டுக் கொண்டிருந்த போது, தந்தையர் தினம் குறித்த யோசனை தோன்றியதாகவும், அதையடுத்து, ஜூன் 20, 1910 ஞாயிற்றுக்கிழமை அன்று அவருடைய தந்தைக்காக தேவாலயத்தை ஒரு புகழுரையை ஏற்பாடு செய்தார். அதன்முதலே அதிகார்வப்பூர்வமாக தந்தையர் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

ஒவ்வொரு குழந்தைக்கும் முதல் ஹீரோ அவனது தந்தைதான். அவரை ரோல்மாடலாக வைத்துக்கொண்டுதான் ஒவ்வொரு செயலையும் செய்வார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. . சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு, தந்தையை மதிக்க கற்றுத் தருவதே இத்தினத்தின் நோக்கம். தந்தைக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3வது ஞாயிறன்று தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.

- Advertisement -
 World Father's Day இன்று உலக தந்தையர் தினம் kidhours
World Father’s Day இன்று உலக தந்தையர் தினம் kidhours

தாய் ஒரு குழந்தையை கருவில் 10 மாதங்கள் சுமந்து பெற்றெடுத்தார் என்றால், குழந்தையை தனது தோள்மீது தூக்கி சுமந்து வளர்ப்பவர் தந்தைதான். அன்பை கூட அதட்டலாக வெளிப்படுத்துவதான் தந்தையின் சிறப்பு.

- Advertisement -

அப்பாவுக்கு எப்படி ஆங்கிலத்தில் தந்தையர் தின வாழ்த்து சொல்வது?

நம்மை படிக்க வைத்து ஆளாக்கிய தந்தைக்கு நாம் செய்யும் கைமாறு என்ன தெரியுமா? இவனுடைய தந்தை இந்த அருமையான மகனைப் பெறுவதற்கு எத்தகைய கடும் தவத்தை செய்தானோ என்றும் மெச்சும் அளவிற்கு நாம் நம்முடைய தந்தைக்கு மரியாதையை தேடித்தரவேண்டும் என்று வள்ளுவரே கூறியுள்ளார்.

வீட்டுக்கான கடமையை தாய் கற்றுத் தருகிறார். எனினும் வீட்டுக்கும் நாட்டுக்கும் சமூகத்திற்கு மான கடமையை தந்தையின் வழிநின்றே பல குழந்தைகள் கற்றுக்கொள்கின்றனர். அதனாலேயே தந்தைக்கு கூடுதல் பொறுப்பு கூடிவிடுகிறது.

அதனால் தான் நமது இலக்கியங்களில் தாயிக்கு இணையாக தந்தையும் போற்றப்படுகிறார். அந்த போற்றுதல் இன்றைய நவீன உலகிலும் தொடர்வதை நாம் பார்க்க முடியும். கதைகளின் வாயிலாக, ஒரு கலைப்படைப்பின் வாயிலாக, திரைப்படங்கள் வாயிலாக என தந்தையின் அன்பு என்றும் போற்றப்பட்டு வருகிறது.

தான் பட்ட கஷ்டத்தை தன் மகனோ, மகளோ படக்கூடாது என்று எத்தனையோ தியாகங்களை செய்து வளர்த்திருப்பார் தந்தை. இந்த நன்னாளில் உங்களின் தந்தை உங்களுக்காக செய்த தியாகங்களையும், பட்ட கஷ்டங்களையும் எண்ணிப் பாருங்கள். அவருக்கு மரியாதை செய்யுங்கள்.

இன்று உலக தந்தையர் தினம் - ஜூன் 20 World Father's Day 1

இன்றைய காலக்கட்டத்தில் தந்தையர் தினம் கொண்டாடப்பட வேண்டு … ஏனென்றால் அண்மைச்சூழலில், பிள்ளைகள் வளர்ந்த பிறகு பெற்றோரை கைவிடும் சம்பவங்கள் அதிகரித்து விட்டன. தாயை விட தந்தையை கைவிடும் பிள்ளைகள் இந்திய சமூகத்தில் பெருகிவிட்டதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

இதுபோன்ற ஒரு கட்டமைப்பில், நம்முடைய தமிழ் சமூகம் தந்தையர் தினத்தை எவ்வாறு அணுகுகிறது என்பது மிக முக்கியம்.

தந்தையை கொண்டாடுங்கள், கேக் வெட்டி உங்கள் அப்பாவை புத்துணர்ச்சிச் செய்யுங்கள், உடைகள் எடுத்து தாருங்கள், நகைகளை பரிசளியுங்கள் என்று சொல்லவில்லை. மாறாக, அன்றைய நாளில் தந்தையுடன் நேரத்தை செலவிடுங்கள்.

உலகம் முழுவதும் தந்தையர் தினம் கொண்டாடப்படும் நாள் வித்தியாசப்பட்டாலும், தந்தையர் தினம் என்ற அந்த நாள் உணர்வுபூர்வமான ஒரு நாள் என்பதனை மறுக்க முடியாது.

 

kidhours – World Father’s Day

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.