Monday, May 20, 2024
Homeகல்விபொது அறிவு - உளச்சார்புஉலர் திராட்சை (பிளம்ஸ்) பழ உற்பத்தி நாடுகளின் பட்டியல் Plums Product Countries

உலர் திராட்சை (பிளம்ஸ்) பழ உற்பத்தி நாடுகளின் பட்டியல் Plums Product Countries

- Advertisement -

Plums Product Countries  பொது அறிவு செய்திகள்

- Advertisement -

இனிப்புச் சுவையும், கூல் பதமும் கொண்ட பழம் ஒன்றை யாருக்கு பிடிக்காமல் இருக்கும்? அப்படி எல்லோருக்கும் பிடித்தமானதாக இருப்பதுதான் பிளம்ஸ் பழம். பிளம்ஸ் பழங்கள் பல வண்ணங்களில் உண்டு என்றாலும், காண்போரின் மனதை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ள சிவப்பு நிற பிளம்ஸ் நமக்கு மிக பிடித்தமானது.இதேபோல பர்பிள், பச்சை, மஞ்சள், பிங்க், ஆரஞ்சு போன்ற நிறங்களிலும் பிளம்ஸ் பழங்கள் விற்பனைக்கு வருகின்றன.பிளம்ஸ் பழங்களில் விட்டமின் சி சத்து மிகுதியாக உண்டு.

அது நம் உடலில் ஏற்படும் புண்களை குணமாக்கவும், தசைகளை கட்டமைக்கவும், ரத்த நாளங்களை வலுப்படுத்தவும் உதவியாக அமையும். இத்தகைய பிளம்ஸ் பழ உற்பத்தியில் முன்னணியில் உள்ள நாடுகளின் பட்டியலை இப்போது பார்க்கலாம்

- Advertisement -

10ஆம் இடத்தில் பிரான்ஸ் : வருடத்தின் பெரும்பாலான நாட்கள் பனி படர்ந்து காணப்படும் ஐரோப்பிய தேசங்களில் ஒன்றான பிரான்ஸ் நாட்டில் ஆண்டுக்கு 2,11,269 டன் அளவுக்கு பிளம்ஸ் பழம் உற்பத்தி செய்யப்படுகிறது.

- Advertisement -

9ஆம் இடத்தில் இத்தாலி : இத்தாலி நாட்டில் ஆண்டுக்கு 2,20,729 டன் அளவுக்கு பிளம்ஸ் உற்பத்தி ஆகிறது. பிளம்ஸ் பழங்களை சாப்பிடுவதால் நமக்கு இதய நோய் ஏற்படக் காரணமான அழற்சி கட்டுக்குள் வரும்.

8ஆம் இடத்தில் ஸ்பெயின் : ஸ்பெயின் நாட்டில் ஆண்டுக்கு உற்பத்தியாகும் பிளம்ஸ் பழங்களின் அளவு 2,22,020 டன் ஆகும். பிளம்ஸ் பழங்களில் ஆண்டிஆக்ஸிடண்ட் சத்துக்கள் மிக அதிகம். இந்த சத்துக் குறைந்தால் மனதில் கவலைகள் அதிகரிக்கும். அந்த வகையில் கவலைகள் பறந்தோட பிளம்ஸ் பழம் சாப்பிடலாம்.

Plums Product Countries  பொது அறிவு செய்திகள்
Plums Product Countries  பொது அறிவு செய்திகள்

7ஆம் இடத்தில் இந்தியா : இந்தியாவில் ஆப்பிள், மாம்பழம், வாழைப்பழம் போன்றவற்றை போலவே மக்கள் விரும்பி சாப்பிடக் கூடிய பழங்களில் ஒன்றாக பிளம்ஸ் இருக்கிறது. நம் நாட்டில் 2,61,903 டன் அளவுக்கு ஆண்டுதோறும் பிளம்ஸ் பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

6ஆம் இடத்தில் ஈரான் : ஆண்டுக்கு 2,69,113 டன் அளவுக்கான பிளம்ஸ் பழங்கள் ஈரான் நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றன. பிளம்ஸ் பழங்களில் நார்ச்சத்து மிக அதிகம். அந்த வகையில் நம் செரிமானக் கட்டமைப்பை சுமூகமாக இயங்கச் செய்ய உதவியாக அமைகிறது. மலச்சிக்கல் பிரச்சினைக்குத் தீர்வு தருகிறது.

5ஆம் இடத்தில் துருக்கி : துருக்கியில் ஆண்டுக்கு 2,97,589 டன் அளவுக்கு பிளம்ஸ் பழங்கள் அறுவடை செய்யப்படுகின்றன. பிளம்ஸ் பழங்களில் உள்ள பொட்டாசியம் சத்து நம் உடலில் உள்ள உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டு வருகிறது. அத்துடன் ஸ்டிரோக் ஏற்படுவதற்கான அபாயம் கட்டுப்படுத்தப்படும்.

4ஆம் இடத்தில் அமெரிக்கா : ஆண்டுக்கு 3,92,537 டன் அளவுக்கான பிளம்ஸ் பழங்கள் அமெரிக்காவில் உற்பத்தி ஆகின்றன. பிளம்ஸ் பழங்களில் உள்ள நார்ச்சத்து நம் உடலில் ரத்த சர்க்கரை அதிகரிப்பதை கட்டுப்படுத்துகிறது.

3ஆம் இடத்தில் செர்பியா : செர்பியாவில் ஆண்டுக்கு 4,63,115 டன் அளவுக்கான பிளம்ஸ் பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. உலர்ந்த பிளம்ஸ் பழங்களை சாப்பிட்டால் நம் உடலில் எலும்புகளின் தேய்மானம் கட்டுப்படுத்தப்படும்.

2ஆம் இடத்தில் ரோமானியா : இங்கு 5,12,975 டன் அளவிலான பிளம்ஸ் பழங்கள் ஓர் ஆண்டில் உற்பத்தி செய்யப்படுகின்றன. பிளம்ஸ் பழங்களை சாப்பிட்டால் தோல் நோய்களுக்கு தீர்வு கிடைக்கும்.

முதல் இடத்தில் சீனா : சீனாவில் ஆண்டுக்கு 6,663,165 டன் அளவுக்கு பிளம்ஸ் பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. பிளம்ஸ் பழங்களில் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், விட்டமின் சி, விட்டமின் ஏ மற்றும் விட்டமின் கே ஆகிய சத்துக்கள் உள்ளன.

 

Kidhours – Plums Product Countries

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.