Saturday, July 27, 2024
Homeபொழுது போக்குமூலிகைகளை சேகரிப்போம்அகத்தி கீரையின் மருத்துவம் Humming Bird Tree Leaves Akaththi

அகத்தி கீரையின் மருத்துவம் Humming Bird Tree Leaves Akaththi

- Advertisement -
 Akaththi  humming bird tree leaves –மூலிகைகளை சேகரிப்போம்
மருத்துவ குணங்ககள் நிறைந்த கீரைகளில் முதன்மையாக பார்க்கப்படுவது அகத்திக் கீரை.

அகத்திக் கீரையில் நீர்ச்சத்து 73 சதவீதம், புரதச்சத்து 8.4 சதவீதம், கொழுப்பு 1.4 சதவீதம், தாது உப்புக்கள் 2.1சதவீதம், நார்ச்சத்து 2.2 சதவீதம், மாவுச்சத்து 11.8 சதவீதம் உள்ளன.

- Advertisement -

மேலும் சுண்ணாம்புச்சத்து, இக்கீரையில் அதிக அளவில் உள்ளதால், இது பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. இக்கீரையில் உயிர்ச்சத்துக்கள் நிறைய உள்ளது. வைட்டமின் ஏ 100கி, 9000 கலோரிகள் உள்ளது. அதேபோல் தயாமின் சத்து 0.21 மி.கி அளவும், ரைபோப்ளேவின் 0.09 மி.கி அளவும், வைட்டமின் சி 169 மி.கி அளவும் அகத்திக் கீரையில் உள்ளன.

அகத்திக் கீரையில் இலையும், பூவும், காயும், பட்டையும், வேரும் மருந்தாகப் பயன்படுகின்றன

- Advertisement -
Akaththi humming bird tree leaves - Akaththi மூலிகைகளை சேகரிப்போம்
Akaththi humming bird tree leaves – Akaththi மூலிகைகளை சேகரிப்போம்

உடல் என்பதன் இன்னொரு பொருள் அகம் என்பதாகும். அகத்தை சுத்தம் செய்யும் தன்மை கொண்டதால் இந்த கீரை அகத்தி கீரை என அழைக்கப்படுகிறது. அகத்தி மரத்தின் இலை, பூ, காய், பட்டை, வேர் ஆகிய அனைத்தும் மருந்தாக பயன்படுகின்றன. பொதுவாக அகத்தி கீரையில் இரண்டு வகை உள்ளது. அதில் ஒன்று வெள்ளை நிற பூக்களைக் கொண்டது. இன்னொன்று, சிவப்பு நிற பூக்களைக்கொண்ட செவ்வகத்தி.

- Advertisement -

அகத்திக்கீரையில் மொத்தம் 63 வகை சத்துகள் இருப்பதாக சித்த மருத்துவத்தில் குறிபிடப்பட்டுள்ளது. இதில் 8.4 சதவிகிதம் புரதச்சத்தும், 1.4 சதவிகிதம் கொழுப்புச்சத்தும், 3.1 சதவிகிதம் தாது உப்புகள் மற்றும் மாவுச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, சி ஆகிய சத்துகளும் உள்ளன.

அகத்திக்கீரையை பொதுவாக யாரும் விரும்பி உண்ண மாட்டார்கள். காரணம் அதன் கசப்பு சுவையாகும். ஆனால் அதன் மருத்துவ பயன்களை பற்றி தெரிந்து கொண்டால் யாரும் இந்த கீரையை தவிர்க்கமாடார்கள். இந்த கீரையின் மருத்துவ பயன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

1. இக்கீரை காய்ச்சலைக் குறைத்து உடல்சூட்டை சமன்படுத்தும் இயல்புடையது. குடல்புண், அரிப்பு, சொறிசிரங்கு, தொண்டைப்புண் மற்றும் தொண்டைவலி, தோல் நோய்கள் போன்றவற்றிற்கு இக்கீரை மிகசிறந்த மருந்தாகும்.
2. அகத்திக்கீரையைப் பச்சையாக மென்று சாற்றை உள்ளே விழுங்கும்போது தொண்டைப் புண், தொண்டை வலி ஆகிய நோய்கள் நீங்கும்.
3. ரத்த பித்தம், ரத்த கொதிப்பு, ஆகியவை அகத்திக்கீரையை சாப்பிடுவதால் அகலும்.
4. அகத்திக்கீரையை வாரம் ஒரு முறை சமைத்து சாப்பிட்டால் வெயிலில் அலைவதால் ஏற்படும் வெப்பம், மலச்சிக்கல், காபி, டீ, ஆகியவற்றைக் குடிப்பதால் ஏற்படும் பித்தம் ஆகியவை நிவாரணம் கிடைக்கும்.
5. அகத்தி கீரையைப் சாறு பிழிந்து அதன் சாற்றை 2 துளி மூக்கில் விட்டால் காய்ச்சல் நீங்கும்.
6. அகத்தி இலைச் சாற்றை நெற்றியில் தடவி நெற்றியை இலேசாக அனலில் காண்பித்தால் கடுமையான தலைவலி, சளி, ஜலதோஷம் போன்றவை நீங்கும்.
7. இக்கீரையில் சுண்ணாம்புச் சத்து, வைட்டமின் ஏ போன்ற சத்துகள் அதிகளவு நிறைந்து உள்ளது. பால் சுரப்பு அதிகம் இல்லாத தாய்மார்கள் தொடர்ந்து அகத்திக் கீரையைச் சாப்பிட நன்கு பால் சுரக்கும்.
8. அகத்தி கீரை வயிற்றுப் புண் நோயைக் குணப்படுத்தும். இதற்கு அகத்திக்கீரையை நன்றாக கழுவி இதில் 4 பங்கு சின்ன வெங்காயத்தை சேர்த்து அகத்திக்கீரை சூப் தயாரித்து தினமும் 1 வேளை குடிக்கலாம்.
9. உடலில் காணப்படும் தேமலுக்கு அகத்தி கீரையின் இலையை தேங்காய் எண்ணெய்யில் வதக்கி, அதை விழுதாக அரைத்து பூசி வந்தால் தேமல் முற்றிலுமாக மறையும்.
10. அகத்தி கீரை சாற்றை சேற்று புண்களில் தடவி வர சேற்று புண்கள் விரைவில் ஆறிவிடும்.

இக்கீரை சமைக்கும்போது நன்றாக வேக வைத்தே உண்ண வேண்டும். அகத்திகீரையானது மருந்துகளின் வீரியத்தை குறைக்கும் சக்தி கொண்டது. அகத்திகீரையை சாப்பிடும்போது எந்த மருந்தையும் எடுத்துகொள்ள கூடாது. ஏனெனில் மருந்துகளின் சக்தியானது அகத்திகீரையின் முன் செயலிழந்து விடும். ஆகவே, மருந்துகள் சாப்பிடும்போது இதை கண்டிப்பாக சாப்பிடக் கூடாது. மேலும் இந்தக் கீரையை தொடர்ந்து அடிக்கடி சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிட்டால் மருந்தாகச் செயல்படவேண்டிய அகத்தியானது அதற்கு எதிராகச் செயல்பட்டு உடலில் சொறி, சிரங்கை ஏற்படுத்திவிடும்.

அதே போல அகத்திக்கீரையையும் கோழிக்கறியையும் ஒரே நேரத்தில் சாப்பிடக்கூடாது. மது அருந்திவிட்டு இந்தக் கீரையைச் சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிட்டால் மாரடைப்பு உள்ளிட்ட இதயம் தொடர்பான பாதிப்புகளை ஏற்படுத்தும். வாயு கோளாறு உள்ளவர்கள் மற்றும் அஜீரண கோளாறு உள்ளவர்கள் இந்த கீரையை தவிர்ப்பது நல்லது.

 

Kidhours – humming bird tree leaves – Akaththi , humming bird tree leaves Akaththi  moolikai , Akaththi

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.