Monday, May 20, 2024
Homeகல்விபொது அறிவு - உளச்சார்புஉலகின் முதலாவது செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு நிறுவனம் AI Defense Institute

உலகின் முதலாவது செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு நிறுவனம் AI Defense Institute

- Advertisement -

AI Defense Institute  பொது அறிவு செய்திகள்

- Advertisement -

பிரித்தானியா உலகின் முதலாவது செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு நிறுவனத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.

இவ் விடயம் தொடர்பில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

குறித்த விடயம் தொடர்பில் ரிஷி சுனக் மேலும் தெரிவிக்கையில்,அடுத்த வாரம் பிரித்தானியாவில் நடைபெறவுள்ள உலக செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு உச்சி மாநாட்டை முன்னிட்டே இந்த நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மேலும் உலகின் முதலாவது செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு நிறுவனத்தை அறிவித்த ரிஷி சுனக், இந்த நிறுவனம் செயற்கை நுண்ணறிவு குறித்த அறிவை மேம்படுத்தவும், புதிய செயற்கை நுண்ணறிவு வகைகளை ஆய்வு செய்து சோதிக்கவும் உதவும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.தொழிற்புரட்சி, மின்சாரம் கண்டுபிடிப்பு, இணையத்தின் தோற்றம் போல செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிப்புகளும் உலகில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளது என அவர் தெரிவித்தார்.

AI Defense Institute  பொது அறிவு செய்திகள்
AI Defense Institute  பொது அறிவு செய்திகள்

மேலும், புதிய வகை செயற்கை நுண்ணறிவு கருவிகளை ஆய்வு செய்வதிலும், சோதனை செய்வதிலும் இங்கிலாந்து முன்னணியில் இருப்பதால், உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு நிறுவனத்தின் தலைமையகமாக இங்கிலாந்து விளங்கும் எனவும் குறிப்பிட்டார்.செயற்கை நுண்ணறிவானது பல்வேறு முன்னேற்றங்களை வழங்கும் அதே சமயம் பல்வேறு ஆபத்துகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

இரசாயன அல்லது உயிரியல் ஆயுதங்களை உருவாக்குவதை செயற்கை நுண்ணறிவு எளிதாக்கும், இதனால் பயங்கரவாத குழுக்கள் இதனைப் பயன்படுத்தி பெரிய அளவில் அழிவைப் பரப்ப முயற்சிக்கக்கூடிய வாய்ப்புக்கள் அதிகளவில் உள்ளது.

இவ்வாறு இரண்டு வேறுபட்ட கோணங்களை இந்த செயற்கை நுண்ணறிவு கொண்டுள்ளது, எது எவ்வாறாயினும் முன்னேற்றத்தினை நோக்கிய பாதையினை நாம் தெரிவு செய்து பயணிக்க வேண்டும் எநாவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Kidhours – AI Defense Institute

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.