Friday, April 19, 2024
Homeகல்விபொது அறிவு - உளச்சார்புசீன ஆயுதப்படைகளை விமர்சித்தால் தண்டனை world best tamil kids news

சீன ஆயுதப்படைகளை விமர்சித்தால் தண்டனை world best tamil kids news

- Advertisement -

tamil kids news -siruvar neram siruvar sithikal சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

சீனாவில் புதிய சட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது சர்வதேச அளவில் விவாதப் பொருளாகியுள்ளது. இஸ்லாமிய குடியரசான பாகிஸ்தானின் நெருங்கிய நண்பன் என்பதை சீனா இந்த விஷயத்திலும் பின்பற்றுகிறது. கம்யூனிச நாடான சீனா, பாகிஸ்தான் சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்திய அதே சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

ராணுவ வீரர்களை அவதூறு செய்வதற்கு எதிராக சீனா ஒரு புதிய சட்டத்தை இயற்றியுள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே அமலில் உள்ள 2018 ஆம் ஆண்டின் சட்டத்தை அந்நாடு வலுப்படுத்தியது. 2018 ஆம் ஆண்டின் சட்டத்தின் கீழ் கிழக்கு லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஆண்டு இந்திய ராணுவத்துடன் நடந்த போரில் கொல்லப்பட்ட பி.எல்.ஏ வீரர்களை (PLA soldiers) அவதூறு செய்ததற்காக பிரபல சீன வலைதளப் பதிவர் ஒருவருக்கு அண்மையில் தண்டனை வழங்கப்பட்டது.

- Advertisement -
tamil kids news kidhours
tamil kids news kidhours

வியாழக்கிழமையன்று நடைபெற்ற தேசிய மக்கள் காங்கிரஸின் (National People’s Congress) நிலைக்குழுவின் அமர்வின் முடிவில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டத்தின் படி, எந்தவொரு அமைப்பும் அல்லது தனிநபரும் படைவீரர்களின் மாண்பை அவதூறு செய்யவோ அல்லது இழிவுபடுத்தவோ கூடாது. ஆயதப் படையில் பணிபுரிபவர்களின் நற்பெயரை அவமதிக்கவோ அவதூறு செய்யவோ முடியாது.
புதிய சட்டத்தின் படி, ராணுவ பணியாளர்களை அவதூறு செய்தல் மற்றும் அவர்களின் நியாயமான உரிமைகள் மற்றும் நலன்களை மீறுதல் போன்ற செயல்களை மேற்கொள்பவர்கள் மீது பொது நலன் வழக்குகளை பதிவு செய்ய முடியும்.

- Advertisement -

சமூக வலைதளங்களில் 2.5 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்ட இணைய பிரபலமான கியு ஜிமிங் (Qiu Ziming) என்பவருக்கு இந்த சட்டத்தின் கீழ் தண்டனை விதிக்கப்பட்டது. ‘தியாகிகளை இழிவுபடுத்தியதற்காக’ கடந்த மே 31ஆம் தேதியன்று எட்டு மாத சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. இது குற்றவியல் சட்டத்தில் ஒரு புதிய திருத்தம் செய்யப்பட்ட பிறகு சீனாவில் பதிவான முதல் வழக்கு இது.
ஆன்லைனில் ‘லாபிக்சியோகியு’ (‘Labixiaoqiu’) என்று அறியப்படும் கியு ஜிமிங் (Qiu Ziming), நாட்டில் உள்ள முக்கிய உள்நாட்டு இணையதளங்கள் மற்றும் தேசிய ஊடகங்கள் மூலம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

கியு ‘தனது குற்றத்தை உண்மையாக ஒப்புக்கொண்டார்’ என்று கிழக்கு சீனாவின் ஜியாங்சு (Jiangsu) மாகாணத்தில் நாஞ்சிங் (Nanjing) நீதிமன்றம் குறிப்பிட்டது. அதனால் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு இலகுவான தண்டனை வழங்கப்பட்டதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது.

 

kidhours – tamil kids news

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.