Miraculous Meteorite in Europe சிறுவர்களுக்கான உலக செய்திகள்
உலகில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தள ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், போர்ச்சுக்கல் நாடுகளை கடந்து சென்ற பிரகாசமான விசித்திர விண்கல் ஒன்றின் வீடியோ பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் அண்மைக்காலமாக வைரலாகி வருகின்றது
அதிசய கிரகமாகிய பூமிக்கு வெளியே விண்வெளியில் ஏராளமான கோள்களும், விண்மீன்களும், விண்கற்களும் உள்ளன. பிரபஞ்சம் முழுவதுமே சிறியது முதல் எவரெஸ்ட்டை விட பெரிய அளவில் பரந்தளவில் காணப்படுகின்றன விண்கற்கள் கூட சர்வசாதரணமாக சுற்றி வருகின்றனர்.
சூரிய குடும்பத்தை தாண்டி சென்றால் உள்ள இண்டெஸ்டெல்லார் பெல்ட் என்பது இப்படியான விண்கற்களால் உருவான ஒரு மாபெரும் வளையம்தான். பூமியை நாள்தோறு ஏகப்பட்ட விண்கற்கள் தாண்டி செல்கின்றன.
அப்படி செல்லும் சில விண்கற்கள் புவியீர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு, பூமியின் காற்று மண்டலத்திற்கு நுழைகையில் பற்றி எரியத் தொடங்குகிறது. அதன் பின்னர் எரிநட்சத்திரமாக வானில் பிரகாசித்தப்படி சென்று பூமியின் ஏதாவது ஒரு பகுதியில் விழுகிறது.
நேற்று முன் தினம் (19) அவ்வாறாக மிகவும் ஒளியுடன் கூடிய பெரிய எரிநட்சத்திரம் ஒன்று போர்ச்சுக்கல், ஸ்பெயின் என இரண்டு நாடுகளையுமே கடந்து சென்றுள்ளது.
அது கடந்து சென்றபோது வீசிய வெளிச்சத்தில் இரவு பொழுதும் பகலாக மாறியது. மக்கள் அதை வாய்பிளந்து பார்த்தபோது சிலர் தங்களது செல்போன்களிலும் அதை படம் பிடித்துள்ளனர். அந்த விண்கல் அட்லாண்டிக் கடலில் சென்று விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
Kidhours – Miraculous Meteorite in Europe
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.