Saturday, July 27, 2024
Homeசிறுவர் செய்திகள்ராட்சத பலூன்களில் குப்பைகளை அனுப்பிய நாடு பற்றி தெரியுமா? Garbage sent by balloons

ராட்சத பலூன்களில் குப்பைகளை அனுப்பிய நாடு பற்றி தெரியுமா? Garbage sent by balloons

- Advertisement -

Garbage sent by balloons  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

ஆச்சரியம் ஆனால் உண்மை ராட்சத பலூன்கள் மூலம் தென்கொரியாவுக்கு , வடகொரியா தனது கழிவு குப்பைகளை அனுப்பிவைத்துள்ளதாக தென்கொரிய அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ராட்சத பலூன் பையில் எல்லா வகையான குப்பைகள் அதாவது , பிளாஸ்டிக் பாட்டில், பேட்டரிகள், ஷூ பகுதிகள், சாணம் மற்றும் ஏனைய கழிவுகளும் இருந்தாக அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளது.வடகொரியாவின் இந்த செயல் சர்வதேச சட்டத்தை மீறுவதாகவும் ஒருநாட்டுக்கு இழுக்கினை ஏற்படுத்த இந்த செயல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறித்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் , தென்கொரிய மக்களுக்கு எதிராக இது ஒரு தீவிரமான பாதுகாப்பு மிரட்டல் எனவும் தென்கொரிய அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

- Advertisement -

இந்த மனிதாபிமானமற்ற மற்றும் மிகவும் தரம்தாழ்ந்த செயலை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கடுமையாக எச்சரிக்கிறோம் எனவும் தென்கொரியா தனது கண்டனத்தை தெரிவித்தள்ளது.

- Advertisement -

மேலும் எல்லை அருகில் அமைந்துள்ள ஜியோங்க்கி, கங்வோன் மாகாணத்தில் உள்ள உள்ளூர் அரசு நிர்வாகிகள் மற்றும் மக்கள் , அடையாளம் தெரியாத பொருட்கள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் வெளியில் செல்ல வேண்டாம் எனவும் அவற்றில் வேறு எதுவும் நச்சுப்பொருட்கள் கலந்திருக்கலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

அதோடு வடகொரியா அனுப்பிய பொருட்கள் வீடுகள், விமான நிலையங்கள் மற்றும் சாலைகளுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியதாக இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

Garbage sent by balloons  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Garbage sent by balloons  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

கொரிய தீபகற்பத்தில் வடகொரியா அமெரிக்காவுடன் இணைந்து போர் ஒத்திகை மற்றும் அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி தென்கொரியாவை அச்சுறுத்தி வருவது குறிப்பிடதக்கது

இந்த நிலையில் தற்போது ஏராளமான ராட்சத பலூன்களை தென்கொரியா எல்லைக்குள் இரண்டு பலூன்களை ஒன்றாக இணைந்து அதில் குப்பைகளை கட்டி அனுப்பி வைத்துள்ளது. என்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது .

 

Kidhours – Garbage sent by balloons

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.